செப்டம்பர் 28-ல் 'செக்கச்சிவந்த வானம்' ரிலீஸ் - லைக்கா அறிவிப்பு!Sponsoredமணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'செக்கச்சிவந்த வானம்' வெளியாகும் தேதியை லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

'காற்று வெளியிடை' படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் திரைப்படம், 'செக்கச் சிவந்த வானம்'.  தமிழ் சினிமாவில் ஒரு படம் பற்றிய அறிவிப்பு வெளியானவுடன் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது என்றால், அது இந்தப் படத்துக்குதான். காரணம், தமிழ் சினிமா வரலாற்றில் மல்டி ஹீரோஸ் இணைந்து நடிக்கும் படமாக இது உருவாகிறது. இப்படத்தில், விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய் என 4 ஹீரோக்கள் நடிக்கின்றனர். படத்தில் ஹீரோயினாக ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இது தவிர, படத்தின் முக்கிய கேரக்டர்களில் பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, மன்சூர் அலிகான், தியாகராஜன் போன்றோரும் நடிக்கின்றனர். இதனால், படம்குறித்து எக்கச்சக்கமான எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். 

Sponsored


இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், படத்தின் போட்டோக்கள் அவ்வப்போது வெளியாகி வைராலகி வந்தன. குறிப்பாக, ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு, விஜய் சேதுபதிக்கு ஒரு ஸ்பூனால் சாப்பாடு ஊட்டிவிடும் புகைப்படம் செம வைரலானது. இந்நிலையில், படம் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் என படத்தைத் தயாரித்துவரும் லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் 'செக்கச் சிவந்த வானம்' செப்டம்பர் 28ல் வெளியாகும் என லைக்கா அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

Sponsored
Trending Articles

Sponsored