"கிடைக்கிற இடத்தில் எல்லாம் அரசியல் பேசுவேன்" - கமல்ஹாசன்Sponsored2015ல் 'பாபநாசம்', 'உத்தம வில்லன்', 'தூங்கா வனம்' என மூன்று படங்கள் கொடுத்த கமல்ஹாசன், அடுத்தடுத்து பல வேலைகளில் பிஸியாகிவிட்டதால் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், மூன்று வருடத்திற்கு பிறகு 'விஸ்வரூபம் 2' படம் இன்று வெளியானது. படத்தை மக்களோடு பார்த்த கமல்ஹாசன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, 'படம் ஆரம்பிக்கும் முன் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் பாடல்கள் திரையிடப்படுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதை எப்படி பார்க்கிறீர்கள்?' என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், "படத்திற்கு நடுவில் முதல்வர் பத்தின வீடியோவை திரையிடுறாங்க. அது விமர்சனத்திற்கு உள்ளாகாத போது, நான் இப்போ கட்சி ஆரம்பிச்சிருக்கேன். கிடைக்கிற மேடைகள் எல்லாத்துலையும் அரசியல் பேசுவேன். எங்களுடைய முன்னேற்றத்தை நான் எடுத்து வைப்பேன். அதுக்கான மேடை கிடைச்சது பேசிட்டு இருக்கேன். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அதைத்தான் பண்ணிட்டு இருக்கேன்" என்றார். பின், கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்கள். அதை நீங்கள் வலியுறுத்துவீர்க்ளா? என்றதற்கு, "அவர்களாக மனம் உவந்து கொடுக்கட்டும். அப்போதான் தமிழனுக்கு பெருமை.வலியுறுத்தி கொடுக்கிறது தமிழனுக்கு பெருமை இல்லை" என்று கூறியுள்ளார். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored