இப்படியும் ஒரு கலாசாரம், காதல் இருக்கிறது! - இயக்குநர் சுசீந்திரனின் `பியார் பிரேமா காதல்’ விமர்சனம்Sponsoredபியார் பிரேமா காதல் திரைப்படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.


இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பியார் பிரேமா காதல். இந்த படத்தை அறிமுக இயக்குநர் இளன் இயக்கியுள்ளார். இந்த படம் நேற்று திரைக்கு வந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் சுசீந்திரன், `முதல் தயாரிப்பில் யுவன் வெற்றிப்பெற்றுள்ளார். இயக்குனர் இளன் தன் வசனத்தின் மூலம் காட்சிகளை சுவாரசியப்படுத்தியுள்ளார். ஹரிஷ்கல்யாணின் நடிப்பும், முனிஷ்காந்தின் டையலாக் டெலிவரியும், யுவனின் இசையும் படத்துக்கு பெரிய பலம்.

Sponsored


Sponsored


அதேபோல ஆனந்த பாபுவின் நேர்த்தியான நடிப்பு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். இப்படியும் ஒரு கலாச்சாரம், காதல் இருப்பதையும் இளன் கடைசி 20 நிமிடங்களில் அதில் இருக்கும் எமோஷனலையும் தெளிவாக பதிவு பண்ணியுள்ளார். இந்த படத்தை கலாச்சார சீரழிவு என்றும் கூறலாம். இப்படியொரு கலாச்சார காதல் நடைமுறையில் உள்ளதென்றும் வாதம் செய்யலாம். ஒட்டுமொத்ததில் அனைவரும் சேர்ந்து ஒரு வெற்றிப்படத்தை ரசிகர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தந்துள்ளனர். வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார்.
 Trending Articles

Sponsored