கேரளா வெள்ளம் - தென்னிந்திய நடிகர் சங்கம் நிதியுதவிSponsoredதென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு இடுக்கி, எர்ணாகுளம், ஆலப்புழா ஆகிய இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 37க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருகின்றன. ராணுவம், பேரிடர் மேலாண்மை ஆகியோர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர்.

அதனை சரிசெய்து மக்களை காப்பாற்ற வேண்டும் என பல்வேறு அமைப்புகள் தங்களால் முடிந்தவரை உதவி வருகின்றனர். இந்த சேதத்திற்கு நிவாரண நிதியாக சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து 25 லட்ச ரூபாய் வழங்கியிருக்கின்றனர்.கமல்ஹாசனும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரள மக்களுக்கு 25 லட்ச ரூபாய் நிவாரண நிதி அளித்திருக்கிறார். 

Sponsored


இந்நிலையில் நாசர் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 38வது செயற்குழு கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின், கேரளா வெள்ள நிவாரண நிதியாக ஐந்து லட்ச ரூபாய் வழங்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Sponsored
Trending Articles

Sponsored