கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜய்..!Sponsoredமறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் இன்று காலை அஞ்சலி செலுத்தினார். 


இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சர்கார்' படத்தில் நடித்துவருகிறார் விஜய். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்நிலையில், கருணாநிதி காலமான செய்தி அறிந்து மனம் வேதனையுற்ற விஜய், படப்பிடிப்பை முடித்துக்கொண்டு அவசரமாக இந்தியா திரும்பினார்.

Sponsored


லாஸ் வேகாஸில் இருந்து சுமார் 22 மணி நேரம் விமானத்தில் பயணித்து சென்னை வந்தடைந்த விஜய், இன்று அதிகாலை நான்கு மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரடியாக மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலிசெலுத்தினார். முன்னதாக, கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா அஞ்சலி செலுத்தினார்.

Sponsored
Trending Articles

Sponsored