‘ஒவ்வொரு நொடியும் அவள் எங்களுடன்தான் வாழ்கிறாள்’ - ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் உருக்கம்Sponsored‘ஸ்ரீதேவி, ஒவ்வொரு நொடியும் எங்களுடன்தான் வாழ்கிறாள். நாங்கள் அவளைப் பிரிந்திருக்கவில்லை’ என ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாக நடிகையாகத் திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. இவர், கடந்த பிப்ரவரி மாதம் லண்டனில் ஒரு ஹோட்டலில் திடீரென உயிரிழந்தார். ஸ்ரீதேவின் இறப்பு அவரின் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஸ்ரீதேவின் குடும்பம் அவரின் இறப்பில் இருந்து இன்னும் மீண்டுவரவில்லை. 

Sponsored


இன்று, நடிகை ஸ்ரீதேவியின் 55-வது பிறந்தநாள். ஸ்ரீதேவி இறந்த பிறகு, அவரது குடும்பத்தினர் சந்திக்கும் முதல் பிறந்தநாள் இது. இது குறித்து அவரின் கணவர் போனிகபூர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் , “ திரையுலகில் பல ஹீரோக்கள் வரலாம் பல ஜாம்பவான்கள் வரலாம். ஹீரோக்களை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள். ஆனால், ஜாம்பவான்கள் என்றும் இறப்பதில்லை. ஸ்ரீதேவி ஒவ்வொரு நொடியும் எங்களுடன்தான் வாழ்ந்துகொண்டிருகிறாள். அதனால், அவளை நாங்கள் பிரிந்திருக்கவில்லை’ என தெரிவித்துள்ளார். 

Sponsored


ஸ்ரீதேவியின் பிறந்தநாளைச் சிறபிக்கும் வகையில், பாலிவுட் ஆர்ட் புராஜெக்ட் (Bollywood Art Project ) நிறுவனம், மும்பை பாந்த்ராவில் உள்ள சாபல் சாலையில், ஒரு சுவரில் 18 அடி உயரத்துக்கு ஸ்ரீதேவின் படத்தை வரைந்துள்ளனர். இதற்கு போனிகபூர் மற்றும் அவரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். Trending Articles

Sponsored