விமானியை மணக்கிறார் நடிகை சுவாதி !Sponsored'சுப்ரமணியபுரம்', 'போராளி', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர், சுவாதி. டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த இவர், 'டேஞ்சர்' எனும் தெலுங்குப் படத்தின்மூலம் சினிமாவில் அறிமுகமானார். சென்ற ஆண்டு  வெளியான 'ஆண்டவன் கட்டளை' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'லண்டன் பப்புலு' படத்துக்குப் பிறகு, அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில், சுவாதிக்கு விகாஷ் என்பவருடன் ஆகஸ்ட் 30-ம் தேதி ஹைதராபாத்தில் திருமணமும், செப்டம்பர் 2-ம் தேதி கொச்சியில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது. சில வருடங்களாகக் காதலித்துவந்த இவர்கள், தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் இணையவிருக்கின்றனர். திருமணம் முடிந்த பிறகு, அவர் தன் கணவரோடு இந்தோனேசியாவில் குடியேற இருக்கிறார் . விகாஷ், விமானியாகப் பணிபுரிந்துவருகிறார்.   

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored