`சாலை விழிப்பு உணர்வுப் பிரசார விளம்பரங்களில் நடித்தது இதனால்தான்!’ - நெகிழும் அக்‌ஷய் குமார்Sponsoredமத்திய அரசின் சாலை பாதுகாப்பு விழிப்பு உணர்வு பிரசார விளம்பரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.

மத்திய அரசு, சாலை பாதுகாப்பு விழிப்பு உணர்வு பிரசாரத்தை நடத்தி வருகிறது. இதற்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் விளம்பரத் தூதுவராக உள்ளார். இந்நிலையில், சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்களில் நடித்துள்ளார் அக்ஷய் குமார். தலா ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த விளம்பரங்கள், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. தான் நடித்த மூன்று வீடியோக்களையும், தனது ட்விட்டர் பக்கத்தில் அக்ஷய் குமார் பதிவிட்டுள்ளார்.

Sponsored


Sponsored


மேலும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், `சாலை விபத்துகள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களை அறிந்துகொண்டபின், உடனடியாக மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த விளம்பரங்களில் நடித்தேன். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோருக்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளார். வெளியிடப்பட்ட 3 வீடியோக்களிலும் போக்குவரத்துக் காவலராக தோன்றி சாலைவிதிகளைக் கடைப்பிடிக்கத் தவறுபவர்களிடம், விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறார் அக்ஷய் குமார்.Trending Articles

Sponsored