வரதன், தியாகு பாத்திர வரிசையில் அடுத்தது யார்... சிம்புவா... விஜய் சேதுபதியா?Sponsoredதமிழ் சினிமாவில் இயக்குநர் மணிரத்னம் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உண்டு. ஒவ்வொரு படமும் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தியேட்டரில் படம் வெளியாகும் நாள் வரை பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. பெரும்பாலும், ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில்தான் அவருடைய படங்கள் இருக்கும். அந்தவகையில், மணிரத்னத்தின் லேட்டஸ்ட் படம் `செக்கச்சிவந்த வானம்’. இந்தப் படத்தில் நடிகர்கள் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பொதுவாக, மணிரத்னம் தன்னுடைய படங்கள் குறித்த தகவல்களை சீக்ரெட்டாகவே வைத்திருப்பார். ஆடியோ, ட்ரைலர் வெளியீட்டின்போதுதான் சில விஷயங்களை மட்டும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிப்பார். ஆனால், இந்தப் படத்தை பொறுத்தவரை இவரின் அணுகுமுறையில் சில மாற்றங்கள் தென்படத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, அவரது படங்களின் கதாப்பாத்திரங்கள் பெயரை முன்கூடியே தெரிவிக்க மாட்டார். ஆனால், கடந்த சில நாள்களாகப் படத்தின் கதாப்பாத்திரப் பெயர்களை வெளியிட்டு வருகிறார். வரதன் கதாப்பாத்திரத்தில் அரவிந்த்சாமியும், தியாகு எனும் பாத்திரத்தில் அருண் விஜய்யும் நடிக்கிறார்கள் என்பது லைக்கா நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. 

Sponsored


இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி `செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, சிம்பு போன்றோரின் கதாப்பாத்திரப் பெயர்களில் ஏதேனும் ஒன்று வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. 

Sponsored
Trending Articles

Sponsored