`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் டிரெய்லர்!உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சித் தொகுப்புகளுடன் `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Sponsored


நடிகர் விஜய் சேதுபதி தயாரித்துள்ள திரைப்படம்தான் `மேற்குத் தொடர்ச்சி மலை'.  மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழ்கின்ற நிலம் அற்ற உழைக்கும் மக்களின் கதை குறித்து படத்தில் பேசப்பட்டுள்ளது.`வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல' படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த லெனின் பாரதி, இந்த படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ள இப்படம் பல்வேறு நாடுகளின் சினிமா விழாக்களிலும் திரையிடப்பட்டு விருதுகளைக் குவித்து வருகிறது. வரும் 24ம் தேதி உலகெங்கும் இப்படம் ரிலீஸாக உள்ளது. அதன்படி, படத்தை புரோமோஷன் செய்யும் விதமாக சமீபத்தில் படம் குறித்து விஜய்சேதுபதி பேசிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ``இந்தப் படத்தை தயாரித்தில் ஆத்ம திருப்தியுடன் இருக்கிறேன்" என விஜய் சேதுபதி கூறியிருந்தார்.

Sponsored


இந்நிலையில், படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. வசனங்கள் ஏதும் இல்லாமல் வெறும் காட்சித் தொகுப்புகளை மட்டும் வைத்தே டிரெய்லர் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை கண்முன் காட்டும் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, இசைஞானி இளையராஜாவின் உருகவைக்கும் பின்னணி இசையும் டிரெய்லருக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. இதனால், டிரெய்லர் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

Sponsored
Trending Articles

Sponsored