Sponsored
தமிழ் சினிமாவிலும் தமிழக அரசியலிலும் ஜெயலலிதாவுக்கு தனி இடம் உண்டு. பல நடிகைகளுக்கு அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்பதே கனவாக இருந்துவருகிறது. ஆனால், அவரின் பயோபிக் உருவாகுமா என்ற கேள்வியும் இருந்து வந்தது. இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் விஜய் படமாக எடுக்கவிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அவரது பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று வெளியிட்டு, அன்றைய தினத்திலிருந்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். தென்னிந்தியாவின் முக்கிய சினிமா பிரபலங்களுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சிலரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர். திரைப்படத்தின் முதல் பாதி அவருடைய திரையுலக வாழ்க்கை குறித்தும், இரண்டாம் பாதி அரசியல் வாழ்க்கை குறித்தும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி ஹீரோயின்களிடம் பேச்சு வார்த்த நடைபெற்றுவருகிறது. என்.டி.ஆரின் பயோபிக், ரன்வீர் சிங் கபில் தேவாக நடிக்கும் படம் ஆகியவற்றைத் தயாரித்துவரும் விப்ரி நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.
Sponsored
Sponsored
Trending Articles
இஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்?- டி.ராஜேந்தர் விளக்கம்
இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..! சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat
`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்!'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை
Sponsored