'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் டீஸர் வெளியீடு !மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’. இந்தப் படத்தை‘ 'தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்தின் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்க, கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கிறார்.

Sponsored


இயக்குநர் சுசீந்திரன் முதன்முறையாக நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து, படத்தின் டீஸரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சண்டை, துப்பாக்கிச் சூடு என முழுக்க முழுக்க ஆக்‌ஷன் நிறைந்திருக்கிறது. 'துருவங்கள் பதினாறு', 'தாக்க தாக்க' ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். வித்தியாசமான காம்போவில் படம் உருவாகியிருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored