கேரளா வெள்ளம் - நிவாரணப் பணிகளில் கைகோத்த தென்னிந்திய நடிகர்கள்கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டு மிகுந்த சேதமடைந்துள்ளது. இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,500-க்கும் மேற்பட்ட முகாம்களில் லட்சக்கணக்கான மக்கள் இருந்து வருகின்றனர். அவர்களுக்கான அடிப்படை பொருள்கள் மற்ற இடங்களிலிருந்து அனுப்பப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் கேரள வெள்ளத்துக்கு தங்களால் முடிந்த அளவுக்கு நிவாரண நிதியை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். அவ்வாறு தென்னிந்திய நடிகர்கள் அளித்த நிதியுதவியின் பட்டியல் இது. 

Sponsored


கமல்ஹாசன் - 25 லட்சம்
மோகன்லால் - 25 லட்சம் 
மம்மூட்டி, துல்கர் சல்மான் - 25 லட்சம்
சூர்யா, கார்த்தி - 25 லட்சம் 
அல்லு அர்ஜுன் - 25 லட்சம்
விஜய் சேதுபதி - 25 லட்சம்
தனுஷ் - 15 லட்சம்
விஷால் - 10 லட்சம்
சிவகார்த்திகேயன் - 10 லட்சம்
சித்தார்த் - 10 லட்சம்
நயன்தாரா - 10 லட்சம்
விஜய் தேவரக்கொண்டா - 5 லட்சம்
தென்னிந்திய நடிகர் சங்கம் - 5 லட்சம்
ரோகிணி - 2 லட்சம்
மலையாள சினிமா நடிகர் சங்கம் (AMMA) - 10 கோடி
டோவினோ தாமஸ், சுரேஷ் கோபி, அமலா பால், உன்னி முகுந்தன் உள்ளிட்ட நடிகர்கள் களத்தில் இறங்கி பணிபுரிந்து வருகின்றனர். மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான் ஆகியோர் சமூக வலைதளங்களில் கேரளா வெள்ளம் குறித்தும் மீட்புப் பணிகள் குறித்தும் அப்டேட் செய்து வருகின்றனர். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored