பாபி சிம்ஹாவுக்கு ஜோடியானார் ரம்யா நம்பீசன் !Sponsored'திருட்டுப்பயலே 2', 'சாமி ஸ்கொயர்' ஆகிய படங்களுக்கு பிறகு பாபி சிம்ஹா நடித்து வரும் படம் 'அக்னி தேவ்'. இந்தப்படத்தை 'சென்னையில் ஒரு நாள் 2' படத்தை இயக்கிய ஜான் பால் ராஜனும் சாம் சூர்யா என்பவரும்  இணைந்து இயக்கி வருகின்றனர். சதீஷ் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

ராஜேஷ் குமார் நாவலை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தை சியாண்டோ ஸ்டூடியோ தயாரிக்கிறது. இந்தப் படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று குழப்பத்தில் இருந்த படக்குழுவினர், இப்போது ரம்யா நம்பீசனை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவரது நடிப்பில் உருவான 'நட்புனா என்னனு தெரியுமா', 'சீதக்காதி' ஆகிய படங்கள் வெளிவரக் காத்திருக்கின்றன.  

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored