`ஏ.எல்.விஜய் எடுத்த பெஸ்ட் படம் இதுதான்' - நெகிழ்ந்த பிரபுதேவா!Sponsoredஇயக்குநர் ஏ.எல். விஜய் மற்றும் நடிகர் பிரபு தேவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `தேவி' திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. நீண்ட நாள்கள் நடிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டு திரைப்படங்கள் இயக்குவதில் பிஸியாக இருந்த பிரபுதேவா இந்தப் படத்தின் மூலம் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ’லக்ஷ்மி' திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர். நடனத்தை மையப்படுத்திய ’லக்ஷ்மி' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகிறது. பிரபுதேவா உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ’பேபி’ தித்யா முன்னணி கதாபாத்திரத்திலும் கோவை சரளா, கருணாகரன் எனப் பலரும் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில். ’லக்ஷ்மி’ படக்குழுவினர் பத்திரிகையாளரை சந்திப்பை நடத்தியிருந்தனர். விழாவில் படத்தில் பணியாற்றியவர்கள் பேசினர்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்:

Sponsored


``பல படங்கள்ல அம்மா கதாபாத்திரம் பண்ணிட்டோம், கொஞ்ச நாள் அதெல்லாம் விட்டுட்டு கமர்ஷியல் ஹீரோயின் ரோல் பண்ணலாம்னுதான் இருந்தேன். தயக்கத்தோடதான் விஜய் சார் கிட்ட கதை கேட்டேன். ஆனா கதை கேட்டதும் பிடிச்சது ஒத்துக்கிட்டேன். பிரபு தேவா சார் ஒரு லெஜெண்ட். அவரோட நடிக்கறது ரொம்ப பெறுமையா இருந்தது. நடிகர், நடன இயக்குநர் எல்லாத்தையும் தாண்டி அவர்கிட்ட நல்ல நகைச்சுவை உணர்வு இருந்தது. ’லக்ஷ்மி’ படத்துல வேலைச் செஞ்ச எல்லா குழந்தைகளும் மிகவும் திறமைசாலிகள். படம் கண்டிப்பா குழந்தைகளுக்கு ஒரு இன்ஸ்பிரேஷ்னா இருக்கும்”

Sponsored


நடிகர் பிரபுதேவா:

``கதை சொல்லுறதுக்கு முன்னாடி விஜய் ஒரு டான்ஸ் படம் பண்ணலாம்னு ஐடியா சொன்னாரு. ‘பண்ணா இந்தியா அளவுல பண்ணனும்னு சொன்னேன்’ அதுக்கு ஏத்த மாதிரி கதையும் அமைஞ்சிருக்கு. ஏ.எல். விஜய் எடுத்த பெஸ்ட் படம் இதுதான். நல்ல படங்கள் நிறைய பண்ணிருந்தாலும் இதுதான் ஒரு இயக்குநரோட படமாக இருந்தது. இந்தியா முழுவதும் டான்ஸ் நிகழ்ச்சிகள்ல பெர்ஃபார்ம் பண்ண குழந்தைகள தேர்ந்தெடுத்து இந்தப் படத்துல நடிக்க வச்சிருக்கோம். டான்ஸ் மட்டுமல்ல பல இடங்கள்ல அழவும் வச்சிருக்காங்க. நிச்சயமா இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும் ஜாலியாக இருக்கும்”

இயக்குநர் விஜய்:

``தேவி படம் பண்ணிட்டு இருக்கும்போதுதான் இந்தப் படத்தைப் பற்றி யோசனை வந்தது. பிரபு சார்தான் இந்தப் படத்துக்குப் பக்கபலமாக இருந்தார். நடிக்கறதோடு மட்டுமில்லாம படம் முடியற வரை செட்ல இருந்து உற்சாகப்படுத்திட்டே இருப்பாரு. ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்துல அவங்களுக்கு டான்ஸ் ஃபோர்ஷன் இல்லைனாலும், அவங்களுக்கும் தித்யாவுக்குமான பாண்ட் அற்புதமா இருந்தது. தித்யாவும் மத்த எல்லா குழந்தைகளுமே நல்ல ஃபெர்பார்ம் பண்ணிருக்காங்க. டான்ஸ் படத்துக்கு மியூசிக் ரொம்ப முக்கியம். சாம் சிறப்பா இசை அமைச்சிருக்கார். படம் நிச்சயம் ஒரு நல்ல டான்ஸ் மூவியா இருக்கும்.Trending Articles

Sponsored