சென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி !Sponsoredபட வாய்ப்புகள் தருவதாகச் சொல்லி தன்னை பலர் ஏமாற்றிவிட்டதாக டோலிவுட்டிலும் கோலிவுட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. தற்போது `ரெட்டி டைரி' எனும் தமிழ்ப் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை தித்தர் ஃபிலிம் ஹவுஸ் மற்றும் ரங்கீலா என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இவர், "ஜெயலலிதா அம்மாவை வணங்கி நான் ஆரம்பிக்கிறேன். காரணம், என் ரோல் மாடல் ஜெயலலிதாதான். நான் அரை நிர்வாண போராட்டம் நடத்தியபோதும் தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் எனக்கான நீதி கிடைக்கவில்லை. ஆனால், தமிழ்நாடு எனக்கான வலியை வெளிய கொண்டு வந்திருக்கிறது. இந்தப் படத்தில் சிலருடைய பெயர்கள் வெளிவரும். தமிழ்நாட்டு மேல, உலகம் முழுக்க நல்ல மரியாதை இருக்கு. ஆனா, சிலர் தமிழ்நாட்டுக்குக் கெட்ட பேர் வாங்கிக் கொடுக்கிறாங்க. இனி, கிளாமர் ரோல்களில் நடிக்க மாட்டேன். பெண்களை மையப்படுத்தின கதைகளில் மட்டுமே நடிப்பேன். சென்னையில் செட்டிலாகி அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருக்கிறேன்" என்றார். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored