சிரஞ்சீவியின் `சயீரா நரசிம்மரெட்டி’ டீசர் ரிலீஸ் - ட்ரெண்டாக்கிய தெலுங்கு ரசிகர்கள்!Sponsoredதெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் `சயீரா நரசிம்மரெட்டி’ டீசர் வெளியாகியுள்ளது. இதை அவரின் தெலுங்கு ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

தனது 150 வது பட வெற்றிக்குப் பிறகு, பிரமாண்டமான வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. `சயீரா நரசிம்மரெட்டி' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண் தயாரிக்க ரேஸ் குர்ராம், துருவா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து வரலாற்றுப் படமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, `நான் ஈ' சுதீப் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். 

Sponsored


தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, தமிழராகவே  நடிக்கிறார் எனச் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இதனால் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் படம் குறித்த எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டரை அமிதாப் பச்சன் வெளியிட்ட நிலையில், தற்போது டீசர் வெளியாகியுள்ளது. ஒரு நிமிடத்துக்கும் மேலான டீசரில் பெரிய கோட்டை ஒன்றின் மேல் சிரஞ்சீவி நிற்பது போன்ற பிரமாண்டமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த டீசரை தெலுங்கு ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

Sponsored
Trending Articles

Sponsored