`நான் நானாக இருக்கப்போறேன்..!’ - பிக் பாஸ் என்ட்ரி குறித்து நடிகை விஜயலட்சுமிSponsored`எனக்கு, உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும்’ என்று பிக் பாஸ் வீட்டுக்குள் கால் பதித்திருக்கும் நடிகை விஜயலட்சுமி, மக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். 


 

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி, 60 நாள்களைக் கடந்த நிலையில் சற்று சுவாரஸ்யம் குறைந்துள்ளது. ' முதல் பாகத்தில் இருந்த சுவாரஸ்யம் தற்போதைய நிகழ்ச்சியில் இல்லை' என்று ரசிகர்கள்  விமர்சித்துவருகின்றனர். எனவே, பிக் பாஸ் வீட்டுக்குள் புதிய முகங்களை அறிமுகப்படுத்தும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்த பிக் பாஸ் குழுவினர், வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நடிகை விஜயலட்சுமியைக் களமிறக்கியுள்ளனர்.  

Sponsored


இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டில்  அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும்போது, " மேலே ஏறி வாறோம்... நீ ஒதுங்கி நில்லு” என்ற பாடலுக்கு நடனமாடியவாறு  பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார் விஜயலட்சுமி. வழக்கம்போல, அவரை மஹத் வரவேற்கிறார். 

'சென்னை 28' படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜயலட்சுமி, சமீபத்தில் சின்னத்திரை நாயாகியாக வலம்வந்தார். பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன் மக்களுக்காக ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  `இவ்வளவு நாள் என்னை நீங்கள் பல கதாபாத்திரங்களில் பார்த்திருப்பீர்கள். இப்போது, நான் நானாக பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கப்போகிறேன். விஜயலட்சுமியாக என்னைப் பார்க்கப்போகிறீர்கள். உங்களின் அன்பும் ஆதரவும் எனக்குத் தேவை’ எனக் கூறியுள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored