``மக்களின் சினிமாவைக் கொண்டாடுவோம்” - மேற்குத் தொடர்ச்சி மலை படம் குறித்து நெகிழும் பா. இரஞ்சித்இன்று வெளியாகவுள்ள ’மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தை மக்களின் படம் என  இயக்குநர் பா.இரஞ்சித் பாராட்டியுள்ளார்.


 

Sponsored


நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில், லெனின் பாரதி இயக்கியுள்ள படம் `மேற்குத் தொடர்ச்சி மலை'. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வாழ்கின்ற நிலம் அற்ற உழைக்கும் மக்களின் கதை குறித்து படத்தில் பேசப்பட்டுள்ளது. இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

Sponsored


இந்தப்படம் வெளியாகும் முன்னரே பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்துள்ளது. இதனால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்தப் படம் இன்று (24-08-2018) வெளியாகவுள்ள நிலையில், நேற்று திரைப்படத்துறை சார்ந்தவர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படத்தைப் பார்த்த பலரும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளனர். இந்த நிலையில், இயக்குநர் பா.இரஞ்சித்

`மேற்குத் தொடர்ச்சி மலை' தொடர்பாக ட்விட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். 

Sponsored


அதில் அவர், ``போலித்தனம் அல்லாத, எளிமை மிக்க வாழ்க்கையை - நிலத்தோடும், காற்றோடும், மொழியோடும் - அதிகாரத்தால் சுரண்டப்படுகிற மனித முகங்களின் சுருக்கத்தில் வழிந்தோடும் எளிமையின் பேரனுபவத்தை `மேற்குத் தொடர்ச்சி மலை' என்னும் மக்களின் சினிமா கொடுத்த இயக்குநர் லெனின் பாரதி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், தயாரிப்பாளர் விஜய் சேதுபதி மற்றும் இத்திரைப்படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் பெரும் பாராட்டுகளும் பெரும் மகிழ்ச்சியும்! எப்போதும் நல்ல தரமான சினிமாவை ஊக்குவிக்கும் அன்பிற்கினிய தமிழ்த்திரைப்பட ரசிகர்களே வாருங்கள் `மேற்குத் தொடர்ச்சி மலை' என்னும் மக்களின் சினிமாவைக் கொண்டாடுவோம்! மகிழ்ச்சி!” எனத் தெரிவித்துள்ளார். Trending Articles

Sponsored