இசைப்புயல் ரஹ்மான் வெளியிடும் `செக்கச்சிவந்த வானம்’ படத்தின் டிரெய்லர்!இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள புதியப்படம் செக்கச்சிவந்த வானம். இந்தப் படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ்ராஜ், மன்சூர் அலிகான், டயானா எரப்பா என பெரும் கூட்டணியே இந்தப் படத்தில் இணைந்துள்ளது. 

Sponsored


இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் ஃபர்ஸ்ட் லுக் தனித் தனியாக வெளியாகியது. இது சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் டிரெய்லர் நாளை(25-08-2018) வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. 

Sponsored


இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லரை ஏ.ஆர் ரஹ்மான் நாளை காலை 10 மணிக்கு வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் செக்கச் சிவந்த வானம் படம் தெலுங்கு மொழியிலும்  `நவாப்’ என்னும் பெயரில் தயாராகியுள்ளது. அதன் டிரெய்லரை நாகர்ஜுனா காலை 10 மணிக்கு வெளியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படம், செப்டம்பர் 28-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.  

Sponsored
Trending Articles

Sponsored