ஆடியோ ரிலீஸுக்கு முன்பே வெளியாகிறதா 'சர்கார்' சிங்கிள் ட்ராக்? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!Sponsored'சர்கார்' படத்தின் சிங்கிள் ட்ராக், ஆடியோ ரிலீஸுக்கு முன்பே வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு குறித்து ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் கைகோத்துள்ள திரைப்படம், 'சர்கார்'. 'துப்பாக்கி', 'கத்தி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் - விஜய் இணையும் அடுத்த படம் என்பதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாகக் கூடியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். அரசியல்வாதி கதாபாத்திரத்தில் பழ.கருப்பையா நடிக்கிறார். காமெடியனாக யோகிபாபு நடிக்கிறார்.

Sponsored


சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பாடல்கள் அக்டோபர் மாதம் 2-ம் தேதி வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இப்படத்தின் சிங்கிள் ட்ராக் பாடலை செப்டம்பர் மாதம் 19-ம் தேதி வெளியிட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாத நிலையில், சிங்கிள் ட்ராக் குறித்த அறிவிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

Sponsored
Trending Articles

Sponsored