`உயர்ந்த மனிதன்' ஆக தமிழுக்கு வரும் அமிதாப் பச்சன்..!Sponsoredபிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தமிழில் அறிமுகமாக உள்ளார். தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் தயாராகவுள்ள `உயர்ந்த மனிதன்’ படத்தில் எஸ்.ஜே. சூர்யா உடன் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தமிழில் முதன்முறையாக இப்படத்தின்மூலம் அறிமுகமாகி நடிக்கவுள்ளார். தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் தயாராகவுள்ள இப்படத்தை திருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் பைவ் எலமென்ட் புரொடக்‌ஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்க, கள்வனின் காதலி இயக்கிய இயக்குநர் தமிழ்வாணன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு `உயர்ந்த மனிதன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் நடந்த விழாவில் வீடியோ மூலம் ரஜினி டைட்டிலை வெளியிட்டார் அதில், ``நண்பர் அமிதாப் பச்சன் தமிழில் அறிமுகமாவதற்கு வாழ்த்துகள்'' என ரஜினி பேசினார். 

Sponsored


Sponsored


இதில் அமிதாப் பச்சனுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், இந்தி என இரு மொழிகளில் தயாராகிறது. இப்படம் மூலம் இந்தியில் முதன் முறையாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது,  ‘படத்தை அடுத்த படிக்கு எடுத்துச் சென்ற இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நன்றி. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெற்றி பெறும். அமிதாப் பச்சனை சந்தித்தபோது அவ்வளவு பிசியாக இருக்கின்ற மனிதனின் கால்ஷீட் கிடைக்க மிகவும் சவாலாக இருந்தது. இப்படி இருக்க `உயர்ந்த மனிதன்' படத்துக்கு அவர் கொடுத்த கால்சீட் 40 நாள்கள் ’ எனக் கூறினார்.Trending Articles

Sponsored