பிக் பாஸ் எவிக்‌ஷனில் ட்விஸ்ட்... வெளியேறினார் டேனி! #Biggboss2



Sponsored



பிக் பாஸ் சீசன் 2 இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில், பிக் பாஸ் விட்டில் இந்த வார நாமிநேஷன் பட்டியலில் இருக்கும் டேனி வெளியேற்றப்பட்டுள்ளார். 

விஜய் டி.வி யில் தற்போது பிக் பாஸ் இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. வாரக் கடைசியில் கமல்ஹாசன் போட்டியாளர்கள் முன்னிலையில் தோன்றி கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சிகள் தொடர்பாக பேசுவார். அதிலும் ஞாயிறு அன்று நாமினேஷன் பட்டியலில் இருக்கும் எந்த நபர் வெளியேற்றப்படுவார் என்றும் அறிவிப்பார். கடந்த வாரம் மகத் ரெட் கார்டு காண்பித்து வெளியேற்றப்பட, நாமினேஷன் பட்டியலில் டேனி, பாலாஜி, ஜனனி ஆகியோர் இணைந்தனர். இவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார்கள் என்று பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கே கணிக்க முடியாமல் இருந்தது. 

Sponsored


இந்நிலையில் தற்போது டேனி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் பாலாஜி தான் வெளியேற்றப்படுவார் என பலரும் நினைத்திருந்த வேளையில் டேனி வெளியேற்றப்பட்டுள்ளார்.  இதனை இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் எபிசோடில் காணலாம். இந்தப் போட்டியின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று நேற்று எபிசோடிலே கமல் தெரிவித்தார். இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் பிக் பாஸ் வீட்டில் இனி வரும் டாஸ்க்குகள்  கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Sponsored




Trending Articles

Sponsored