தீபாவளிக்கு ரிலீஸாகிறது 'எனை நோக்கி பாயும் தோட்டா'!Sponsoredகௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படப்பிடிப்பு நேற்று முடிந்தது. இரண்டு வருடங்களுக்கும் மேல் தயாரிப்பிலிருந்து வந்த இப்படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். 

கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் 'சர்கார்', 'என்.ஜி.கே', சண்டக்கோழி 2, `விஸ்வாசம்` என நான்கு படங்கள் தீபாவளிக்கு வருவதாக அறிவித்தனர். அன்று முதலே ரசிகர்கள் இடையே பலத்த ஆரவாரம் காட்டினர்.  

Sponsored


``நான்கும் பெரிய படங்கள் எப்படி ஒரே சமயத்தில் வரும். இது கண்டிப்பாக மாறும்" என சினிமா வர்த்தக வட்டம் பேசிக்கொண்டிருந்தன.  'விஸ்வாசம்' படம் பொங்கலுக்கும், ' சண்டக்கோழி 2 ' அக்டோபர் 18-ம் தேதி வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்ற வாரம் 'என்.ஜி.கே' திரைப்படம் தள்ளிப்போகும் எனவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், 'எனை நோக்கி பாயும் தோட்டா'  தீபாவளிக்கு ரிலிஸாகிறது என்ற அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்தில் இயக்குநர் சசிக்குமார் தனுஷுக்கு அண்ணனாக நடித்திருக்கிறார். இரண்டு வருடங்களுக்கும் மேல் தயாரிப்பிலிருந்து வந்த இப்படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். 

Sponsored
Trending Articles

Sponsored