`இந்த கேம்ல நீ பாக்குற ரத்தமெல்லாம் நிஜம்; எதிரிகளெல்லாம் நிஜம்!’ - 'நோட்டா' பட ட்ரெய்லர்Sponsoredதெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தயாராகிவரும்' நோட்டா' படத்தின்  ட்ரெய்லரை நடிகர் சூர்யா வெளியிட்டார். 

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகும் படம், ‘நோட்டா’. 'அர்ஜுன் ரெட்டி', 'கீதா கோவிந்தம்' ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தமிழ்த் திரை ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம். 'அரிமா நம்பி', 'இருமுகன்' ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர், 'நோட்டா' படத்தை இயக்குகிறார். இதில் சத்யராஜ், நாசர், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ஷான் கருப்புசாமி வசனம் எழுதியுள்ளார்.  இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லரை நடிகர் சூர்யா ட்விட்டரில்  வெளியிட்டார். முழு அரசியல் படமான இதில், முழுக்க முழுக்க அரசியல் `பன்ச்’தான். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும்  இந்தப்படம், விரைவில் திரைக்கு வர உள்ளது. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored