``பட ரிசல்ட் பத்திகூட இப்போ கவலை இல்ல... ஆனா..?’’ - ஆதங்க அதர்வாSponsoredஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா ஆகியோர் நடித்து வெளிவந்துள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது.

அதில் பேசிய அதர்வா, "அஞ்சு வருஷம் கழிச்சு என் வாழ்க்கையைத் திருப்பிப் பார்த்தா, 'இமைக்கா நொடிகள்' ஒரு சேப்டராக இருக்கும். நானும் அஜய்யும் நிறைய தயாரிப்பு நிறுவனங்கள்கிட்ட அப்ரோச் பண்ணோம். பல தடங்கலைத் தாண்டி, இந்தப் படம் இப்படித்தான் இருக்கணும்னு நினைச்சு பண்ண அஜய்க்குதான் நன்றி சொல்லணும். இந்தப் படத்துக்கு ஒவ்வொரு டெக்னீஷயன்களா கமிட்டாகும்போது, எங்களுக்கான சந்தோஷம் அதிகமாகிட்டே இருந்தது. எல்லாத்துக்கும் மேல, 'ருத்ரா' கேரக்டரை யார் பண்ணப்போறாங்க?'- இதுதான் எங்களுக்கான யோசனையா இருந்துட்டே இருந்தது. 'அகிரா' படம் பார்த்தேன். அனுராக் சார் இந்த கேரக்டர் பண்ணா நல்லயிருக்கும்னு சொன்னார். இதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. அவர் அங்கே வேற லெவல். இங்கே எப்படி வருவார்னு சொல்லிட்டே இருந்தேன். அப்புறம், அவர்கிட்டயும் கதை சொல்லி எப்படியோ கமிட் பண்ணிட்டார். இனி, தமிழ்ல நிறையப் படங்கள் பண்ணுவார்னு நம்பிக்கை இருக்கு. டான்ஸ்ல சதீஷைப் பார்த்து நிறைய கத்துக்கிட்டேன். ஒரு நடிகருக்கு படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி என்ன ரெஸ்பான்ஸ் வரும்னு யோசிப்போம். ஆனா, இப்போ படம் ரிலீஸ் ஆகுமா ஆகதானு டென்ஷன்லயே இருப்பாங்க. படத்தை எல்லாருக்கும் கொண்டுபோய் சேர்த்த விநியோகஸ்தர்களுக்கு பெரிய நன்றி" என்றார். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored