`மீண்டும் இயக்குநர் அவதாரம்' - நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கும் தனுஷ்!Sponsoredமீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் தனுஷ். அவர் தற்போது இயக்கும் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, நாகர்ஜுனா, சரத்குமார் ஆகியோர் நடிக்கவுள்ளனர். தமிழ், தெலுங்கு பைலிங்குவல் படமாக இப்படத்தை இயக்குகிறார் தனுஷ். 

சென்ற வருடம் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த `ப.பாண்டி' அனைவருக்கும் பிடித்த படமாக இருந்தது. இதன்பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவந்த 'வடசென்னை' இம்மாதம் வெளியாகவுள்ளது. அதேநேரம் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடித்து வந்த `மாரி-2' படம், தொடர்ந்து, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடந்து வந்த  'எனை நோக்கிப் பாயும் தோட்டா'ஆகிய படங்களில் தனது நடிப்பு பகுதியை முடித்துக்கொடுத்த கையோடு மீண்டும் இயக்குநர் அவதாரத்தை எடுத்துள்ளார் .

Sponsored


Sponsored


சென்ற வருடம் டிசம்பர் மாதம் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்ததுபோல், தனுஷ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கவிருக்கிறார். ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ், இசை ஷான் ரோல்டன் ஆகியோர் மேற்கொள்ள தேனான்டாள் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, நாகர்ஜுனா, சரத்குமார், ஶ்ரீகாந்த், அதிதி ராவ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

     

இதற்காக நெல்லைப் பகுதிக்குச் சென்றுள்ள படக்குழுவினர் அங்கு படத்தின் பூஜையும் நடத்தியுள்ளனர். இயக்குநர் தனுஷுக்கு வாழ்த்துக்கள்..!Trending Articles

Sponsored