ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் இணையும் `பேட்ட’'காலா' படத்துக்குப் பிறகு, ரஜினி நடிக்கும் புதிய படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு சிம்லா, டார்ஜிலிங் பகுதிகளில் ஆரம்பமானது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா நடிக்கின்றனர். இது தவிர பாலிவுட் நடிகர் நவாசுத்தீன் சித்திக் நடிக்கிறார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இது. 

Sponsored


இது குறித்த தகவலை நவாசுதீன் ட்விட்டர் மூலம் தெரிவித்திருந்தார். அதில், ``தலைவர் 165’க்காக ஒத்திகை செய்துகொண்டிருக்கிறேன். சூப்பர் ஸ்டாருடன் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது'' என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், இதற்கு கார்த்திக் சுப்புராஜ், 'தமிழ் சினிமா உங்களை அன்புடன் வரவேற்கிறது'' என்று பதில் அளித்திருந்தார். இந்நிலையில் 'தலைவர் 165' படத்தின் பெயரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் படத்தோட ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் 'பேட்ட' என்கிற பெயருடன் வெளியாகியுள்ளது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored