சென்றார் சென்றாயன் - வழக்கம்போல் காப்பாற்றப்பட்டார் ஐஸ்வர்யா! #BiggBossTamil2Sponsored பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியிருக்கிறார் சென்றாயன். கடந்த வாரம் டேனி வெளியேற, இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் ஜனனி ஐயர், சென்றாயன், மும்தாஜ், ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இருந்தனர். இவர்களில், ஐஸ்வர்யா வெளியேற்றப்படுவார் என்றே பலரும் நம்பிக் கொண்டிருந்தனர். காரணம், மக்கள் மத்தியில் அவருக்குக் கிடைத்துள்ள இமேஜ். ‘பிக் பாஸ்’ இவருக்கு மட்டும் அதிக சலுகை தந்து ஒவ்வொரு முறையும் காப்பாற்றுவதாகக் கூடப் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

’பிக் பாஸ் அப்படித்தான் செயல்படுகிறார்’ என மீண்டும் பிக் பாஸ் ரசிகர்கள் புலம்பும் படியே அமைந்து விட்டது, சென்றாயன் வெளியேற்றம். ஏனெனில் ஐஸ்வர்யா வெளியேற்றப்படுகிறாரோ இல்லையோ சென்றாயன் நிச்சயம் காப்பாற்றாப்படுவார் என நம்பினவர்களும் அதிகம்.

Sponsored


எல்லாம் பொய்யாகி, எதிர்பாராத ட்விஸ்ட் நிகழ்ந்து விட்டதில், மறுபடியும் ஐஸ்வர்யாவைத் திட்டத் தொடங்கி விட்டது அவருக்கு எதிரான ஆர்மி. கடந்த வாரம்தான் சென்றாயனின் திருமண நாள் வந்து போனது. அதற்கு சில தினங்களுக்கு முன் பிக் பாஸ் வீட்டுக்குச் சென்ற இவரது மனைவி கயல்விழிக்கு அங்கு நலுங்கு நிகழ்ச்சியெல்லாம் நடந்தது. கணவர் எப்படியும் டைட்டில் வெல்வார் என எதிர்பார்த்திருந்த கயல்விழிக்குத்தான் இந்த வார எவிக்‌ஷன் ஏமாற்றத்தைத் தந்து விட்டது.  

Sponsored
Trending Articles

Sponsored