``அடுத்து ஹீரோதான்!’ - யோகி பாபுவின் புதிய அவதாரம்Sponsoredதமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வரும் யோகிபாபு, கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

`எனக்கிப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சுடீ’ என்ற பாடலைக் கேட்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். `கோலாமாவு கோகிலா' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், நடிகர் யோகிபாபுவுக்கு ரசிகர்களிடம் வேற லெவல் ரீச் கொடுத்தது. தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில், மக்கள் மனதில் இடம்பிடித்த காமெடி நடிகர்களுள் யோகிபாபுவும் ஒருவர். 

Sponsored


தமிழ் சினிமாவில் இன்றைய சூழலில் பிஸியான காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, சந்தானம், வடிவேலு ஆகியோரைத் தொடர்ந்து கதாநாயகனாக புரோமோஷனாக இருக்கிறார். டார்லிங், எனக்கு இன்னொரு பேரு இருக்கு மற்றும் 100 ஆகிய படங்களைத் தொடர்ந்து சாம் ஆண்டன், இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனான நடிக்க யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. காமெடியை மையமாக வைத்து உருவாக உள்ள இந்தப் படத்தின் கதை பிடித்துப் போகவே, கதாநாயகனாக நடிக்க யோகிபாபு சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள்.

Sponsored


அந்தப் படத்தில் செக்யூரிட்டியாக நடிக்கும் யோகிபாபு, எப்படி பிணையக் கைதிகளை தீவிரவாதிகளிடமிருந்து மீட்கிறார் என்பதே கதை எனக் கூறப்படுகிறது.  தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகை ஒருவர் யோகிபாபுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதர்வா, ஹன்சிகா நடிக்கும் 100 என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் சாம் ஆண்டன். இந்தப் படத்தையடுத்து, யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. யோகிபாபுவின் இந்தப் புதிய அவதாரம், அவரின் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.Trending Articles

Sponsored