`நான் ஹீரோலாம் இல்லைங்க... காமெடியன்தான்!'- உருகுகிறார் யோகி பாபுSponsored``நான் எந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கவில்லை'' என காமெடி நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் தற்போது மோஸ்ட் வாண்டட் காமெடியனாக இருப்பவர் யோகி பாபு. விஜய், அஜித், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் தவறாமல் இடம்பெற்றுவருகிறார். சமீபத்தில் வெளியான `கோலமாவு கோகிலா' படத்தில் இடம்பெற்ற `எனக்கிப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சுடீ’ பாடல் இவரது சினிமா கிராப்பை மேலும் உயர்த்தியுள்ளது. இதனால் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது. இவர் ஹீரோவாக அவதாரம் எடுக்க இருக்கிறார் என சமீபத்தில் செய்திகள் வெளியாகின. டார்லிங், எனக்கு இன்னொரு பேரு இருக்கு ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன், இயக்கும் புதிய படத்தில் அவர் கதாநாயகனான நடிக்கவுள்ளார் எனவும், காமெடியை மையமாக வைத்து கதை தயாராகியுள்ளது எனவும் செய்திகள் வெளியாகின. ஆனால், 'நான் அப்படி எந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கவில்லை' என யோகி பாபு தெரிவித்துள்ளார். 

Sponsored


இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ``இந்த ரெண்டு நாளா நான் ஹீரோவா தான் நடிப்பேன். காமெடியனா நடிக்க மாட்டேன்னு கொஞ்சப்பேரு போட்டுட்டு இருக்காங்க. சத்தியமா அப்படி ஏதும் கிடையாது. ஹீரோவா பண்ணுறதுக்கான முகம் இது கிடையாது. அதற்கான தகுதியும் இல்லை. என்னனா, சாம் ஆண்டர்சன் சமீபத்துல ஒரு கதை சொன்னாரு. அதுல படம் ஃபுல்லா வர்ற மாதிரி நான் ஒரு கூர்க்கா கேரக்டர் பண்ணுறேன். அவ்வளவுதான். வேற ஏதும் கிடையாது. இத சிலர் பெருசா போட்டுட்டாங்க. எதுக்கு அப்படி பண்ணுனாங்கனு தெரியல. நான் கடைசி வரைக்கும் காமெடியனாதான் டிராவல் பண்ணுவேன். எனக்கு அது தான் தகுதி. மக்களுக்கு அதுதான் பிடிச்சுருக்கு. யார் என்ன சொன்னாலும் நம்ப வேண்டாம். நான் காமெடியனாதான் ட்ரை பண்ணுறேன்" எனக் கூறியுள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored