`அது வதந்தி!' - த்ரிஷா ஹேர் கட்டுக்கு அம்மா விளக்கம்Sponsoredத்ரிஷாவின் நியூ ஹேர்கட், இன்ஸ்டாகிராமில் இப்போதைய டிரெண்ட். த்ரிஷா தன்னுடைய அழகிய ஹேரை பிளன்ட் கட் செய்து ' A women who cuts her hair is about to change her life' எனத் தனது புதுவிதமான ஹேர் ஸ்டைலுடன் செல்ஃபி எடுத்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் அப்லோடு செய்திருந்தார். இந்த நியூ கெட்டப் அடுத்த படத்துக்கானதா அல்லது த்ரிஷா திருமணம் செய்துகொள்ளப்போவதற்கான அறிகுறியா என நெட்டிசன்கள் ஆளுக்கொரு தகவலைப் பரப்பிவருகிறார்கள். எதுதான் உண்மை? த்ரிஷாவின் அம்மாவிடம் பேசினோம்.

"இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். ஜஸ்ட் ஃபேஷனுக்காவே செய்துகொண்டார். என் பொண்ணுக்கு முடிதான் அழகு. பொதுவாக, ஹேர்கட் செய்துகொள்வதால் நம்முடைய தோற்றத்தில் சில மாறுதல்களைக் காண்பிக்க முடியும். த்ரிஷா சினிமாவுக்கு வந்த புதிதில் லாங் ஹேர் இருந்தது. சில படங்களிலே அதை ஷார்ட் ஹேராக மாற்றிக்கொண்டார். பிறகு, வேவி ஹேர், ஸ்ட்ரைட் ஹேர் என டிரெண்டுக்கேற்ப மாற்றிக்கொண்டார். அப்படித்தான் இந்த 'பிளன்ட் கட்' ஸ்டைலும். மற்றபடி, எந்தச் சிறப்பும் இல்லை. அப்படி ஏதாவது விசேஷம் என்றால், தனது ரசிகர்களுக்குத்தான் முதலில் சொல்வார்'' என்கிறார் த்ரிஷாவின் அம்மா.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored