`கால்ஷீட் இல்லையே!' - வருந்திய ஜோதிகா... தனுஷ் படத்தில் யார்?Sponsored'வட சென்னை'  படத்தை முடித்த கையோடு, அடுத்த படத்திலும் தனுஷ், வெற்றி மாறன் கூட்டணி தொடரவிருக்கிறது. இப்படத்தை 'கலைப்புலி' தாணு தயாரிக்கிறார். 'வட சென்னை'யில் சென்னையின் இன்னொரு முகத்தைப் படமாக்கியுள்ள இயக்குநர் வெற்றி மாறன், அடுத்த படத்துக்கான கதைக்களத்துக்கு திருநெல்வேலியைத் தேர்ந்தெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். தாணு, தனுஷ், வெற்றி மாறன் என்ற அசத்தல் காம்போவில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, அக்டோபர் மாதம் திருநெல்வேலியில் தொடங்கவிருக்கிறது.

முழுக்க முழுக்க வெளிப்புறப் படப்பிடிப்பில் மட்டுமே நடத்தத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு. 'நாச்சியார்' படத்தில் ஜோதிகா நடித்திருந்த கேரக்டர் மாதிரி ஒரு கதாபாத்திரத்தை இப்படத்துக்காக வெற்றி மாறன் உருவாக்கி வைத்திருக்கிறார். அதில், ஜோதிகாவையே நடிக்க வைக்கலாமா அல்லது வேறொரு நடிகையைத் தேர்ந்தெடுக்கலாமா என்ற யோசனையில், முதலில் ஜோதிகாவிடம் பேசியிருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் அவுட்டோரில் நடக்கும் காரணத்தால், தன்னால் கால்ஷீட் கொடுக்க இயலவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறார் ஜோதிகா. எனவே, ஜோதிகாவுக்கான கேரக்டரில் இப்போது மஞ்சு வாரியர் நடிக்கப்போவதாகச் சொல்கிறார்கள். 

Sponsored
Trending Articles

Sponsored