பாலிவுட் ஸ்டார் நவாஸுதீனை இயக்கும் ராஜுமுருகன்!



Sponsored



இயக்குநர் ராஜுமுருகன் மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்தியா முழுவதும் பயணமாகி எடுக்கப்படும் `ஜிப்ஸி' முக்கால்வாசி முடிவடைந்த நிலையில் அண்மையில் ராஜுமுருகன் மும்பையில் வைத்து பாலிவுட் நடிகர் நவாஸுதீனைச் சந்தித்திருக்கிறார். `ஜோக்கர்' படத்தைப் பார்த்த நவாஸுதீன், `இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்தால் நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன்!' என்று சொல்லியிருக்கிறார்.

`தென்னிந்தியாவிலிருந்துதான் மிக தைரியமான அரசியல் பேசும் படங்கள் வருகின்றன. ஜோக்கர் பேசும் அரசியல், அதன் மொழியைத் தாண்டி என்னை மிகவும் பாதித்தது. நிச்சயம் `பீப்பிள் பிரசிடென்ட்' என்ற பெயரில் அதை இந்தியில் பண்ணினால் கலை ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பைப் பெறும்!' என்று சொல்லி ராஜுமுருகனைப் பாராட்டியிருக்கிறார். இந்த வருடம் தமிழில் `பேட்ட', மற்றும் இரண்டு வெளிநாட்டுப் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால் அடுத்த ஆண்டு கால்ஷீட் தருவதாகவும் சொல்லியிருக்கிறார். 
`இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகக் கருதப்படும் நவாஸுதீன் என் படத்தைப் பாராட்டி அங்கீகரித்திருப்பது என்னை மிகவும் பெருமைப்பட வைக்கிறது. நவாஸுதீனை இயக்கும் அந்தநாளுக்காகக் காத்திருக்கிறேன்' என்று சொல்லியிருக்கிறார் ராஜுமுருகன். 

Sponsored


`ஜிப்ஸி'க்குப் பிறகு `யானை டாக்டர்' என்ற ஜெயமோகனின் புகழ்பெற்ற கதை ஒன்றை ராஜுமுருகன் இயக்க உள்ளார். அதற்கான திரைக்கதை பணியை ஜெயமோகனும் ராஜுமுருகனும் இணைந்து ஏற்கெனவே ஆரம்பித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

Sponsored




Trending Articles

Sponsored