சமந்தாவின் சாமர்த்தியம் - `யு டர்ன்' பட சஸ்பென்ஸ்



Sponsored



2016-ம் ஆண்டு பவன் குமார் இயக்கத்தில்  கன்னடத்தில் வெளியாகி பரபரப்பாக ஓடிய திரைப்படம் `யு- டர்ன்'. ஒரு மேம்பாலத்தில் செல்பவர்கள் தங்கள் வாகனத்தை `யு- டர்ன் எடுக்கும்போது நிகழும் மர்மச் சம்பவங்கள்தாம் கதையின் கரு. `விக்ரம் வேதா' ஸ்ரத்தா நடித்த இந்தப் படம் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.

கன்னடப் படத்தைப் பார்த்து வியந்த சமந்தா, ஸ்ரத்தா நடித்த வேடத்தில் நடிக்க விரும்பினார், அந்தப் படத்தை தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் எடுப்பது என்றும் `யு-டர்ன்' படத்தைக் கன்னடத்தில் இயக்கிய பவன் குமாரே தமிழ், தெலுங்கு ரீ-மேக்கையும் இயக்கியிருக்கிறார். வழக்கமாக தெலுங்கு சினிமா உலகில் சமந்தா ஹீரோயினாக நடித்த முன்னணி நடிகர்களின் ஆடியோ விழாவுக்கு அழைத்தால் டிமிக்கி கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார், சமந்தா. திடீரென்று `யு-டர்ன்' தமிழ், தெலுங்கு ரிலீஸுக்கு முன்பு தானே ப்ரமோஷனில் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு வீடியோ பேட்டி கொடுத்தார். உண்மையில் `யு-டர்ன்' படத்தின் தயாரிப்பாளர் சமந்தா என்றும் தமிழ்நாட்டில் அந்தப் படத்தை தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை தனஞ்செயனுக்குக் கொடுத்திருக்கிறாராம். எல்லாம் சரி சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த `சீமராஜா' படம் ரிலீஸாகும் அதே விநாயகர் சதுர்த்தி அன்றைக்கே தனது படத்தையும் சமந்தா ஏன் ரிலீஸ் செய்கிறார் என்பது `யு -டர்ன்' படத்தின் கதையைவிட மர்மமாக இருக்கிறது.   

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored