`பிறருக்குப் பார்வையளிப்பது மகிழ்ச்சி’ - கண்தானம் செய்த நடிகை ஆண்ட்ரியா!Sponsoredநடிகை, பாடகி, டப்பிங் ஆர்டிஸ்ட் எனப் பன்முகம் கொண்ட கலைஞராக விளங்கி வருபவர் ஆண்ட்ரியா. சமீபத்தில் இவரது நடிப்பில் `விஸ்வரூபம் 2' வெளியானது. இதைத் தொடர்ந்து இவரது நடிப்பில் அக்டோபர் மாதம் `வட சென்னை' திரைப்படம் வெளியாகவுள்ளது. வெற்றிமாறன் இயக்கும் `வடசென்னை' படத்தில் நடிகர் அமீரின் மனைவி கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார். இந்தப் பாத்திரம் இவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கதையில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டரைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ஆண்ட்ரியா. அதுமட்டுமன்றி இவர் டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் பின்னணிப் பாடகியாகப் பல படங்களில் வேலை பார்த்திருக்கிறார். 


இந்நிலையில், தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை தொடக்க விழாவில் பங்கேற்ற ஆண்ட்ரியா, தனது கண்களை தானமாக வழங்குவதாக அங்கே பதிவு செய்துள்ளார். தனது இறப்புக்குப் பிறகு தன்னுடைய கண்கள் பிறருக்குப் பார்வையாக இருப்பதில் மகிழ்ச்சி இருக்கிறது என்று கூறியுள்ளார். இவரது இந்தச் சேவைக்குப் பலரும் வாழ்த்துகள் சொல்லி வருகின்றனர். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored