' 'சதுரங்க வேட்டை-2' படத்தில் அரவிந்த்சுவாமி சோலோ ஹீரோ!'' - மனோபாலாSponsoredவினோத் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் 'சதுரங்க வேட்டை'. ரசிகர்கள் பலரின் ஆரோக்கியமான விமர்சனத்தை இந்தப் படம் பெற்றது. அதனையடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் தயாரிப்பு அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால் இரண்டாம் பாகத்தை 'சலீம்' பட இயக்குநர் நிர்மல்குமார் இயக்குகிறார். முதல் பாகத்தைத் தயாரித்த மனோபாலாவே தற்போது இரண்டாம் பாகத்தையும் தயாரித்து வருகிறார். 'சதுரங்க வேட்டை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் லைக்ஸ் வாங்கிய நிலையில் படத்தின் சுவாரஸ்யத்தைத் தெரிந்துகொள்ள மனோபாலாவிடம் பேசினோம்.


''இந்தப் படத்துக்காக நாங்கள் முதலில் வைத்தப் பெயர் 'அழகில்லா விளையாட்டு', இந்தப் பெயர் கம்பராமாயணத்தில் வரும். 'அழகில்லா விளையாட்டு'ன்னா யூகிக்க முடியாது என்று அர்த்தம். ஆனால், மக்களுக்குப் புரியாமல் போய்விட்டால் என்ன பண்ணுவது? அதனால் 'சதுரங்க வேட்டை 2' என்றே பெயர் வைத்துவிட்டோம். 'சதுரங்க வேட்டை 2' படத்தின் கதையை வினோத்திடம் நான்தான் கேட்டு வாங்கினேன். பத்து நாளில் இந்தப் படத்தின் கதையை வினோத்திடம் நான் எழுதி வாங்கினேன். அரவிந்த்சுவாமி திரும்ப நடிக்க வந்ததுக்கப்புறம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில்தான் நடித்து வந்தார். ஆனா, இந்தப் படத்தில் சோலோ ஹீரோவாக நடித்திருக்கிறார்.

Sponsoredஅதேபோல் அரவிந்த்சுவாமியை இந்தப் படத்தில் நடிக்கச் சொல்லியும் நான்தான் கேட்டேன். 'சதுரங்க வேட்டை' படத்தில் நட்ராஜூக்கு எப்படி காந்திபாபு என்று பெயர் இருந்ததோ, அதேபோல் அதன் தொடர்ச்சியாக இந்தப் படத்திலும் அரவிந்த் சுவாமி பெயர் 'காந்திபாபு'தான் . ஆனால், இந்தப் படத்தில் சபரி என்ற ஒரு புதிய கேரக்டரும் வரும். அதில் ஒரு பிரபலமான ஹீரோ நடித்திருக்கிறார். அவர் யார் என்பது நான் சொல்ல மாட்டேன். அது சஸ்பென்ஸ்’’ எனப் புதிராக முடித்தார் மனோபாலா.
 

Sponsored
Trending Articles

Sponsored