நீட் தேர்வு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? - ஒரு மருத்துவரின் பார்வையில்...Sponsored"ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்றால் முதலில் அவரது ஆசையைத் தூண்ட வேண்டும்!” இது ஒரு ஹிட்டான படத்தின் வசனம். 'நீட்' தேர்வு அடிப்படையிலான மருத்துவச் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிப்பது குறித்து நாங்கள் பரிசீலிக்கின்றோம் என்று தமிழக மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆசைகாட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போது மௌனமாக இருக்கிறார். தமிழகத்தில் இருக்கும் 3,000 மருத்துவ இடங்களை நிரப்புவதுபோக, மீதமுள்ள நீட் எழுதாத மற்றும் நீட் எழுதித் தேர்வாகாத அத்தனை மாணவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கியிருக்கிறது நிர்மலா சீதாராமனின் மௌனமும், மத்திய அரசு ஆடியுள்ள இந்த சதுரங்க வேட்டையும். மாணவர்கள் தரப்பு இதனால் பாதிக்கப்படுவது ஒருபக்கம் இருந்தாலும், தமிழக அரசின் மருத்துவமனைகளின் எதிர்காலம் என்னவாகும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. 

இதற்குப் பதிலளித்துப் பேசிய மருத்துவர் எழிலன், "மருத்துக் கல்வியும், மருத்துவமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. தமிழகத்தில் இருக்கும் மருத்துவ சிஸ்டம்தான் இந்திய அளவிலேயே சிறந்தது என்று பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் தன்னுடைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். கோரக்பூர் கொடும் விபத்துக்குப் பிறகு அங்கு மாவட்டங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளை அரசுக் கல்லூரிகளாக மாற்ற வேண்டும் என்று அந்த மாநில அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், சமூக நீதிக் கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வரும் நமது மாநில அரசு, அதைப் பல வருடங்களுக்கு முன்பே செய்து முடித்துவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் 50% கூட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் கிடையாது. ஆனால், இங்கே ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் 'நியோநாடல்' மருத்துவர்கள், 'பீடியாட்ரிஷியன்' என தனித்தனி பிரிவுகளே இயங்குகின்றன. இது எப்படி செயல்படுத்தப்பட்டது என்றால், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிள்ளைகளை அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கவைத்து பின்னர் அரசுப் பணியிடங்களில் அமரவைத்து, மேலும் அவர்களை சிறப்பு வல்லுநருக்கான படிப்புகளுக்காக ஊக்கப்படுத்துவதால் சாத்திமானது. இதில், இந்தியாவுக்கு தமிழகம் முன்மாதிரியாக இருக்கிறது. அதாவது, தமிழக மருத்துவக் கல்லூரிகளில் படித்த மாணவர்களில் 71% பேர் தமிழகத்தில் இருக்கிறார்கள் அவர்களில் 52% பேர் தமிழக அரசு மருத்துவமனைகளில் வேலை செய்கிறார்கள். 

Sponsored


Sponsored


ஆனால், மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளான AIIMS உள்ளிட்டவற்றில் படித்த மாணவர்களில் 62% பேர் இந்தியாவிலேயே இல்லை. எல்லோரும் அமெரிக்கா, லண்டன் என வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இது இரண்டுமே மத்திய, மாநிலத் தரப்பு டேட்டாக்களில் இருந்து எடுத்த எண்ணிக்கை. மத்திய அரசு கொண்டு வரும் இந்த தகுதித்தேர்வில் படிக்கப்போகும் மாணவர்களில் யாரால் தமிழகத்துக்காக, தமிழக மக்களுக்காக சேவை செய்ய முடியும் என்கிற அடிப்படைக் கேள்வி இதனால் எழுகிறது. இந்திய அரசியலமைப்பு வரலாற்றிலேயே இதுவரை நிகழாத ஒன்றை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நிகழ்த்திக் காட்டியுள்ளார். 'நீட்' தேர்வுமுறைக்கு ஓராண்டு விலக்கு என்று மத்திய அரசு பரிசீலிக்கக் கூடிய அளவுக்கு சாத்தியமானது என்று கூறியவர்கள், நான்கே நாள்களில் தமிழகத்துக்காக மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்துக்கான விளக்க அறிக்கையில் குறிப்பிடுகிறார்கள். யாருடைய ஆதாயத்திற்காகவோ தனது கருத்தை தானே மாற்றிச் சொல்கிறார்கள் என்பது மட்டும் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது” என்றார். 

தனியொரு அரசின் கார்ப்பரேட் கனவுகளுக்கு இங்கே மீண்டும் மீண்டுமாய் ஒரு கோரக்பூரைக் காண யாரும் தயாராக இல்லை.Trending Articles

Sponsored