ஓரணியில் திரண்ட எதிர்க்கட்சிகள், லாலு உருவாக்கிய மெகா கூட்டணி..!Sponsored'பி.ஜே.பி-யை வெளியேற்றி, நாட்டைப் பாதுகாப்போம்' என்ற முழக்கத்துடன் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்திருக்கிறார் லாலு பிரசாத் யாதவ். பீகார் தலைநகர் பாட்னா அதிரும்படி மெகா கூட்டணிப் பொதுக்கூட்டத்தை அவர், நடத்தி முடித்திருக்கிறார். 2019 லோக்சபா தேர்தலைக் குறிவைத்து பி.ஜே.பி-க்கு எதிராக தேசிய அளவில் ஓர் அணி உருவாகியிருக்கிறது.

தொடரும் பி.ஜே.பி எதிர்ப்பு

அத்வானியின் ரத யாத்திரையைத் தடுத்தது முதல் தமது பி.ஜே.பி எதிர்ப்பில் உறுதியோடு இருக்கும் லாலு பிரசாத் யாதவ், பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், அரசியல் எதிரியான நிதிஷ்குமாருடன் இணைந்து அரசியல் அரங்கில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்த இந்தியாவும் வியக்கும் வகையில், லாலு-நிதிஷ்குமார் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றது. 2019 லோக்சபா தேர்தலில் நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். மோடிக்கு டஃப் கொடுப்பார் என்றும் பேசப்பட்டது. இந்தியாவின் எல்லாப் பகுதியிலும் மோடியின் கொடி பறந்த போதிலும் தமிழகம், பீகார், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் பி.ஜே.பி-க்கு செல்வாக்குக் குறைந்தே இருந்தது.

Sponsored


ஆனால், மேற்கு வங்கத்தில் இப்போது மார்க்ஸிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி விட்டு பி.ஜே.பி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்திலும், கேரளாவிலும் காலூன்றுவதற்கான மறைமுகத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பீகாரில் லாலு-நிதிஷ் கூட்டணியை உடைக்க கடந்த சில ஆண்டுகளாகவே பி.ஜே.பி அரசு கடும் முயற்சிகளில் ஈடுபட்டது.

Sponsored


உடைந்த கூட்டணி

லாலு மற்றும் அவரது மகன்கள், குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்குளைத் தூசி தட்டியது சி.பி.ஐ. மத்திய ரயில்வே அமைச்சராக லாலு இருந்தபோது நடந்த கேன்டீன் குத்தகை தொடர்பான ஊழலை விசாரித்தனர். இது தொடர்பாக லாலு, பீகாரில் துணை முதல்வராக இருந்த தேஜஸ்வி ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடந்தது. இதனால், நிதிஷ்குமார், லாலுவிடம் இருந்து விலக ஆரம்பித்தார். மோடி எதிர்பார்த்தபடி லாலு-நிதிஷ் இடையே பிரிவு ஏற்பட்டது. கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ்குமார், அடுத்த நாளே பி.ஜே.பி-யுடன் இணைந்து தமது முதல்வர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டார்.

இந்தச் சூழலில்தான் பீகாரில் மட்டும் அல்லாமல், இனி உ.பி., மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பி.ஜே.பி-யை வளரவிடக் கூடாது என்று லாலு பிரசாத் யாதவ் முயற்சித்து வருகிறார். அதன் முதல் கட்டமாக ஒரு மெகா கூட்டணிக்கான வேலைகளைத் தொடங்கினார். 27-ம் தேதி பீகாரில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு வரும்படி எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இணைந்த கட்சிகள்

உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா, ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சரத் யாதவ் உள்ளிட்டோர் ஒரே மேடையில் கைகோத்தனர். லாலுவின் முயற்சியில் முதல் கட்ட வெற்றி கிடைத்திருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய லாலு, "நிதிஷ்குமாருக்கு முதல்வர் பதவி தருவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி வெற்றி பெற்ற உடன், நிதிஷ்குமாருக்கு முதல்வர் பதவியை விட்டுத் தரும்படி சரத் யாதவும், சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவும் கேட்டுக்கொண்டனர். அதனால்தான் நான் நிதிஷ்குமாருக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தேன். எந்தவித கொள்கையும் அற்ற, எந்தவித நம்பிக்கையும் அற்ற தலைவர் நிதிஷ்குமார்

லோக்சபா தேர்தல் கூட்டணி

பி.ஜே.பி-யை எதிர்ப்பவர்களை அடிபணிய வைக்க சி.பி.ஐ., வருமான வரித்துறை போன்ற மத்திய அமைப்புகளை மோடி ஏவி வருகிறார். நான்  இறப்பதற்கு கூட தயாராக இருக்கிறேன். ஆனால், பி.ஜே.பி-யிடம் அடிபணிய மாட்டேன்" என்றார் உறுதியாக
இந்தக் கூட்டணி வரும் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. உ.பி-யில் எதிர் எதிர் துருவத்தில் இருக்கும் சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி இரண்டையும் ஒரே அணியில் இணைப்பதற்கான முயற்சியில் லாலு ஈடுபட்டு வருகிறார். வேற்றுமைகளை மறந்து அகிலேஷ்-மாயாவதி இடையே கூட்டணி உருவாகும் பட்சத்தில் மீண்டும் ஓர் அரசியல் திருப்பம் ஏற்படும் என்றே கருதப்படுகிறது.Trending Articles

Sponsored