மியான்மர் இனப்படுகொலையும்.... ஆங் சாங் சூகியின் கள்ளமௌனமும் .....?Sponsoredஇனப்படுகொலை நிகழ்த்துகிறவர்களே நீதிபதிகளாக இருப்பதுதான் இன்னும் இந்தக் கொடூரப் படுகொலைகள் தொடர்ந்துகொண்டிருக்க மிகப்பெரிய காரணம். இலங்கையில் இன அழிப்பைத் தொடங்கி தற்போது மியான்மரில் அறுவடை செய்து வருகிறார்கள் மதப்பேரின சர்வாதிகாரிகள். இலங்கையில் என்ன நடந்ததோ, அதே இனப்படுகொலைதான் தற்போது மியான்மரில் நடந்து வருகிறது. இலங்கையில் பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் தமிழர்களைக் கொன்று குவித்தது. தற்போது, 'மியான்மரில் பௌத்த மதத்தைப் பின்பற்றவில்லை' எனச் சிறுபான்மையின மக்கள்மீது அங்குள்ள பௌத்தர்களும் ராணுவத்தினரும் காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். 

ரோஹிங்கியா 


தேரவாதா பௌத்த சமயத்தை பெரும்பான்மையாகப் பின்பற்றிவரும் மியான்மர் தேசத்தி பல்வேறு பழங்குடியின மற்றும் வெவ்வேறு இனக்குழுக்கள் வசித்து வருகின்றனர். இதில்  சிறுபான்மை
ரோஹிங்கியா இஸ்லாமிய இனக்குழுவினர் சுமார் 4% பேர் அடக்கம். 

Sponsored


மனிதத் தன்மையற்ற தாக்குதல்கள்

Sponsoredதொடக்கத்தில் ரோஹிங்கியா இஸ்லாமிய மக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்திய பௌத்த மத மக்கள், தற்போது அந்நாட்டு ராணுவத்தினருடன் இணைந்து அவர்களுடைய எண்ணத்தைத் தீவிரபடுத்தி வருகின்றனர். கடந்த 27-ம் தேதி ரோஹிங்கியா ஆயுதக் குழுவுக்கும் மியான்மர் பாதுகாப்புப் படைவீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் மியான்மர் பாதுகாப்பு படைவீரர்கள் 12 பேர் பலியாகினர். 150-க்கும் மேற்பட்ட அப்பாவியான ரோஹிங்கியா இன இஸ்லாமியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என எந்த பாரபட்சமும் இன்றி சுட்டுவீழ்த்தப்பட்டு உள்ளனர். மியான்மர் ராணுவத்தின் இந்த மோசமான நடவடிக்கையால் உள்நாட்டிலேயே இதுவரை சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அங்கு நிலைமை மோசமடைந்து வருவதால் ரோஹிங்கியா இஸ்லாமிய மக்கள் அங்கிருந்து வெளியேறி அகதிகளாக அண்டை நாடுகளிலும் தஞ்சமடைந்து வருகின்றனர்.  

''பௌத்தத்தைப் பின்பற்றாதவர்கள் வாழத் தகுதியற்றவர்கள்!''

மியான்மரில் இனப்படுகொலை தொடர்பாக ரோஹிங்கியா இஸ்லாமிய மக்கள் வாழ்கிற பகுதிக்கே சென்று அங்குள்ள நிலையை ஆவணப்படுத்தியுள்ளது அல் ஜெசிரா தொலைக்காட்சி. அங்கு நடந்துவரும் இனப்படுகொலையை அந்தத் தொலைகாட்சி அம்பலப்படுத்தியுள்ளது. ரோஹிங்கியா இஸ்லாமிய மக்கள் வாழ்கிற பகுதிகள் அனைத்திலும் முள்வேலி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுதந்திரமாக நடமாட முடியாத நிலைக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகக் காட்சிகள் விரிகின்றன. பாலியல் வன்கொமை, கொலை, உடல்ரீதியான துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு அராஜகங்களை நிகழ்த்தி வருவதாக முகாம்களில் உள்ளவர்கள் கதறுகின்றர். 1942-லேயே சிறுபான்மை மக்கள்மீது பௌத்தர்கள் தாக்குதலைத் தொடங்கி இருந்தாலும், தற்போதுதான் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியுள்ளது. பௌத்த மதத்தைச் சாராத ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் நான்கு சதவிகிதம் பேர் மட்டுமே அங்கு வாழ்கின்றனர். இந்த நான்கு சதவிகித மக்கள்தான் பௌத்தர்களுக்குப் பிரச்னையாக இருப்பதாக அந்நாட்டு அரசு கருதுகிறது. இந்த இனப்படுகொலை தொடர்பாக அங்குள்ள அரசியல் தலைவர்களோ அல்லது மதத் தலைவர்களோ இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அங்குள்ள புத்த பீட்சுகள் அல் ஜெசிரா தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ளனர். அதில், ''எங்கள் மண்ணில் இருந்துகொண்டு.. எங்களுடைய உணவைச் சாப்பிட்டுவிட்டு எங்களுடைய கொள்கைகளைப் பின்பற்றாதவர்கள் இங்கு எதற்கு வாழ வேண்டும்? எங்களுடைய சட்ட விதிகள், கலாசாரம், மொழி, பண்பாடு உள்ளிட்ட எதையுமே அவர்கள் பின்பற்றாத நிலையில் அவர்கள் இங்கு வாழத் தகுதியற்றவர்கள். அதனால் எங்கள் நாட்டு ராணுவம் அப்படித்தான் தாக்குதல் நடத்தும்'' என ஈவு இரக்கமன்றித் தெரிவித்துள்ளனர். 

சூகி மௌனம் ஏன்? 

இப்படி மிகக் கொடூரமான மனித உரிமை மீறல் இங்கு நடந்துகொண்டிருக்கையில், ஜனநாயகப் போராளியும் வெளிவிவகாரத் துறை அமைச்சருமான ஆங் சாங் சூகி அமைதி காத்துவருகிறார். நீண்டகால ராணுவ அடக்குமுறையிலிருந்து விடுபட்டு ஜனநாயகக் கட்டமைப்பு அங்கே நிலைநாட்டப்படுவதற்கு அழுத்தமான அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டார் ஆங் சாங் சூகி. அவரது 26 வருட அரசியல் வாழ்வில் 15 ஆண்டுக்காலம் வீட்டுக்காவலில் இருந்தவர். அவருடைய அறவழிப் போராட்டமும் மனித உரிமை மீறலுக்கு எதிரான குரலையும் கண்டு உலக நாடுகளும் அதிர்ந்தன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் அவருக்கு 'சக்காரோவ் விருது' வழங்கி கெளரவித்தது.

 அது மட்டுமன்றி அமைதிக்கான நோபல் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது. அப்படி மனித உரிமை மீறலுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் வாழ்கிற மியான்மரில்தான் தற்போது மனிதம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. அவருடைய அந்த மௌனத்துக்கு அவர் சார்ந்துள்ள பௌத்த மதத்தைத் தூக்கிப் பிடிப்பதே காரணம் எனச் சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் 1991ம் ஆண்டுக்கான அமைத்திகான நோபல் பரிசைப் பெற்றவர் ஆங் சாங் சூகி.

இதுதொடர்பாக மியான்மரில் நடந்துகொண்டிருக்கும் இந்த இனப்படுகொலை குறித்து 2013-லேயே அங்குள்ள மனித உரிமைச்

செயற்பாட்டாளர் மாங் சார்னியிடம் நேர்காணல் நடத்தினார் இதழியலாளர் ஆழி செந்தில்நாதன். தற்போதைய இந்த மியான்மர் இனப்படுகொலை குறித்து என்ன சொல்கிறார் என அவரிடம் பேசினோம். ''வங்கப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு எதிரான மனநிலை பௌத்தர்களிடையே மாறியுள்ளது. இனங்களிடையே சச்சரவுகள் இருக்கலாம். ஆனால், இங்கு ஓர் இனத்தை அழிப்பதற்கான நடவடிக்கை அல்லவா தொடங்கியுள்ளது. இந்த விஷயத்தில் இஸ்லாமிய நாடுகள்கூட மௌனம் காத்து வருவது வேதனையளிக்கிறது. இதுவரை துருக்கி மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ளது. இப்படியான நிலையில், ஜனநாயகப் போராளி என்று  சொல்லக்கூடிய ஆங் சாங் சூகி இதைப் பற்றி வாய்திறக்கவில்லை.‘சுருக்கமாகச் சொல்வதென்றால், ஆங் சாங் சூகி உண்மையான ஜனநாயகவாதி இல்லை. பௌத்த மதவாத அரசியலை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் அரசியல்வாதியாகத்தான் அவர் உள்ளார். அதன் காரணமாகவே, அவர் நீண்டகாலமாக மெளனம் சாதித்துள்ளார். ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடிவர் என்பதால், அவர் ஜனநாயகவாதி என்று சொல்லிவிட முடியாது. பௌத்தர்கள் ரோஹிங்கியா இனமக்கள்மீது நடத்தும் தாக்குதலில் அவர்களுக்கு ராணுவமும் துணையாக நிற்கிறது. உலக நாடுகள் குரல் கொடுத்தால்  மட்டுமே இந்த இனப்படுகொலையைத் தடுக்க முடியும்.

''சூகியின் வாய்ஸ்காகக் காத்திருக்கிறேன்!'' 

மியான்மரில் நடக்கும் இந்த இனப்படுகொலை தொடர்பாக இதுவரை ஐக்கிய நாடுகள் சபை வாய்திறக்காமல் அமைதி காத்து வருகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடந்தபோது எவ்வாறு அமைதி காத்துவந்ததோ, அதே நடைமுறையை இப்போது மியான்மர் விவகாரத்திலும் கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் துணை பொதுச் செயலாளர் விஜய நம்பியார் மட்டும் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆங் சாங் சூகிக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவருடைய வாய்ஸ்க்காக ஐக்கிய நாடுகள் சபை காத்திருக்கிறது' என்று கூறியுள்ளார்.

இனப்படுகொலை நடப்பதற்கான அறிகுறிகள் இலங்கையில் இருப்பதாகச் சர்வதேச இனப்படுகொலை தடுப்பு உயர் அதிகாரி ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச் செயலாளர் விஜய நம்பியாருக்குத் தகவல் அனுப்பியுள்ளார். ஆனால், அவர் இலங்கைக்குச் செல்லவில்லை. அதற்குக் காரணம் இலங்கையில் போரை நடத்தும் ஆலோசகர் சதீஷ் நம்பியாரின் அண்ணன்தான் விஜய நம்பியார். சதீஷ் நம்பியார் அவருடைய அண்ணனான விஜய நம்பியாரை அழைத்துத் தகவலைக் கூற தம்பியின் பேச்சைத் தட்டாமல் கேட்டு இலங்கைக்குச் செல்லாமல் இருந்துவிடுகிறார். அதோடு இருந்துவிடாமல், ஐ.நா-வின் அனைத்துச் சட்டவிதிகளையும் மீறிப் 'போரில் தவறு இழைத்தவர்கள் குறித்து இலங்கை அரசே விசாரிக்கலாம்' என்ற அதிகாரத்தையும் தருகிறார். அப்படிப்பட்டவர்தான் தற்போது மியான்மர் விவகாரத்தில், 'இந்த இனப்படுகொலையை ஏற்க முடியாது' என்று கூறியுள்ளார். அவருடைய இந்தப் பேச்சு எந்த வகையிலானது என்பதை மனித உரிமைப் போராளிகள் அறிவார்கள்'' என்றார்.

இதற்கிடையே சூகியின் நோபல் பரிசைத் திரும்பப் பெறும்படி மனிதநேய ஆர்வலர்கள் நோபல் கமிட்டியிடம் பரிந்துரைத்திருப்பதாகத் தெரிகிறது. 

நெறிகளில் அரசியல் கலப்பதுதான் மதவாதமாக பரிமாணம் எடுக்கிறது. ரோஹிங்கியா மக்களை கொன்று குவிக்கும் ரத்த ஆற்றில் புத்தரின் அன்பும், அமைதியும் காணாமல் போய்விட்டது என்பதே உண்மை !Trending Articles

Sponsored