பெரியாரை அடையாளமாக்கி கொண்டார்கள் பெண்கள் .. ! பெரியாரும் பெண்ணியமும்Sponsoredபெண் விடுதலை இல்லையேல், ஆண் விடுதலையும் இல்லை" என்ற தெளிவானச் சிந்தனையை விதைத்த தந்தை பெரியார், நாட்டில் சாதிய ஒழிப்புடன் பெண் விடுதலையையும் வலுவாகக் கொண்டுசென்றார். பெண்களின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் போராடிய அவருடைய சிந்தனையும் செயலும் எக்காலத்துக்கும் பொருந்துபவையாக உள்ளன.உடன்கட்டை ஏறுதல், விதவை மறுமணம், குழந்தை மண எதிர்ப்பு என பெண் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களில் பெரியார் மட்டுமே, பெண் விடுதலையில் மாறுபட்டச் சிந்தனைகளை முன்வைத்தார்.

தனித்துவிடப்பட்ட பெண்கள், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள், பெண்களுக்குச் சொத்துரிமை, ஆண்  - பெண் சம உரிமை ,விதவை

மறுமணம் போன்றவற்றுக்காக அவருடைய குரல் ஓங்கி ஒலித்தது.இவற்றை எல்லாம் பேசியதோடு மட்டும் நின்றுவிடாமல் தனது வீட்டிலேயே முறைசாரா அமைப்பை ஒன்றையும் ஏற்படுத்தி, அதில் பெண்கள் தங்கள் பிரச்னைகள் குறித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். வீட்டைவிட்டு வெளியேறும் பெண்களுக்காகவும், ஆதரவற்ற பெண்கள் தங்குவதற்காகவும் விடுதி ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்தார். குடும்ப அமைப்பில் பெண்கள் சுரண்டப்படுவதைக் கண்டித்த அவர், சுய சிந்தனை உள்ளவர்களாக மாறி ஆண்களுக்குப் பெண்கள்  சரிசமமாக விளங்க வேண்டும் என்றார். ''சோசலிச நாடுகளில் இருப்பது போன்று குழந்தைகளைத் தனியாகக் காப்பகங்களில் வளர்க்கலாம் அல்லது வேலை ஆள்களை வைத்து வளர்க்கலாம். எப்போதும் குடும்பம், குழந்தை, வீட்டு வேலைகள் என்று இருக்கக் கூடாது. பெண்ணின் வாழ்க்கை, குழந்தை வளர்ப்பு என்பதில் மட்டுமே சுருங்கிவிடக் கூடாது. குழந்தைகளை வரிசையாகப் பெற்றுக்கொண்டு துன்பமடையாமல் ஒன்றிரண்டோடு நிறுத்திக்கொள்ளலாம்.இன்னும் சொல்லப்போனால், குழந்தை பெற்றுக்கொள்ளாவிட்டாலும் அதனால், ஒன்றும் நேர்ந்துவிடாது'' எனப் பிரசாரம் செய்தார். பிள்ளைகளைப் பெறுவதாலேயே பெண்கள் சுதந்திரம், மானம், அறிவு போன்றவற்றைத் துறக்கும் நிலை ஏற்படுகிறது என்று வலியுறுத்தினார்.இப்படியான கருத்தை இந்தச் சமூகத்தில் சேர்க்கப் பலதரப்பட்ட எதிர்ப்பையும் அவர் எதிர்கொண்டார்.அவற்றை எல்லாம் மீறிப் பெண்கள் வாழ்வதற்கு என்ன கொள்கையோ... சட்டமோ அதுவே,நடைமுறையாக வேண்டும் என்று பெரியார் கருதினார். உலகில் வேறு எந்தத் தலைவரும் பெண் விடுதலை குறித்து பெரியார் அளவிற்கு பேசியும் எழுதியும்,இருக்க இயலாது என்ற நிலையில் அவருடைய அயராத பணி அமைந்து  இருந்தது.அதற்காகவே அவரைப் பாராட்டி பெரியார்" என்ற பெயரை வழங்கி மகிழ்ந்தார்கள் பெண்கள்.

Sponsored


1938-ல் தமிழ்நாட்டு பெண்கள் மாநாடு,சென்னையில்  நடைபெற்றது.இந்த மாநாட்டை மீனாம்பாள்,பண்டித நாராயணி, வா.பா.தாமரைக்கண்ணி,நீலாம்பிகை,மூவலூர் ராமாமிர்தம், மருத்துவர் தருமாம்பாள் உட்பட்ட பெண்கள் குழு முன்னின்று நடத்தியது.இந்த மாநாட்டில்தான், ஈ.வெ.ரா-வைப் 'பெரியார்' எனப் பெண்கள் பெயரிட்டு அழைத்து தீர்மானம் நிறைவேற்றினர்.
''இந்தியாவில் இதுவரை சீர்திருத்த தலைவர்கள் செய்யாமல்போன வேலைகளை நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்துவருவதால்,‘தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் வேறு ஒருவர் இல்லை என்பதைக் கருத்தில்கொண்டு அவருடைய பெயரைச் சொல்லாலும்,எழுத்தாலும் 'பெரியார்' என்ற சிறப்புப் பெயரால் அழைக்க வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது'' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Sponsored


இந்தச் சமூகத்தில், சுயமாகப் பெண்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்று அவர் எண்ணியதால்தான்..இன்றும், பெண்கள் மத்தியில் அவர் 'பெரியார்' என்ற அடைமொழியைத் தாங்கி நிற்கிறார்.Trending Articles

Sponsored