ஒலிகளால் ஓர் ஆயுதம்... கியூபாவில் அமெரிக்க தூதர்களுக்கு குறி!Sponsoredகியூபாவின் ஹவானாவில் இருக்கும் ஒரு நட்சத்திர விடுதியில் நல்ல உறக்கத்தில் இருந்தார் அந்த அமெரிக்க தூதர். காதைக் கிழிக்கும் விசித்திர சத்தம் ஒன்று கேட்கவே திடுக்கிட்டுக் கண் விழித்தார். சத்தம் நின்று விடவே மீண்டும் படுக்கையில் வீழ்ந்தார். முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல், மீண்டும் அந்த ஒலி அவர் இருக்கும் அறையில் அதீத சக்தியுடன் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. அதைத்தொடர்ந்து அவருக்குக் கேட்கும் திறனில் பாதிப்பு, பேசுவதில் சிக்கல், விடாத தலைவலி என பல்வேறு பாதிப்புகளின் அறிகுறிகள் தென்பட்டன. கியூபாவில் இருக்கும் 21 அமெரிக்க தூதர்களுக்கு இதுவரை இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கும் இதேபோன்ற பாதிப்புகள் அல்லது இதைவிட அதிகமாகப் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. அமெரிக்கத் தலைமை தூதர் ஒருவர், இதனை “சுகாதாரத் தாக்குதல்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அஸோஸியேட் பிரஸ் (AP) அளித்துள்ள தகவலில், கடந்த செவ்வாயன்று மேலும் இரண்டு பேருக்கு பாதிப்பின் அறிகுறிகள் தென்படுவதாக கூறப்பட்டுள்ளது. கூடுதல் தகவலாக, அவர்கள் தங்கியிருந்த அறைகளில் லேசர் கருவிகள் கொண்டு ஊடுருவியிருக்கலாம் என அளிக்கப்பட்ட விளக்கத்துக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. “நீங்கள் அளிக்கும் விளக்கம் அறிவியல் கோட்பாடுகளை மீறியதாய் இருக்கிறது” என்பது அவர்களின் வாதம்.

Sponsored


முன்னாள் CIA அதிகாரியான ஃபுல்டன் ஆம்ஸ்ட்ராங், கியூபாவில் அமெரிக்கா தூதரகம் திறக்கப்படும் முன்பிருந்தே அந்த நாட்டில் பணியாற்றியவர், அங்கேயே வசிப்பவர். அவர் பேசுகையில், “இவர்கள் கூறும் எதுவும் நம்பும்படி இல்லை. தொடர்ந்து மர்ம முடிச்சுகள் மட்டுமே போடப்படுகிறது. முறையான விளக்கம் எதிலும் இல்லை” என்று காட்டத்துடன் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் நடந்த இவ்வகை தாக்குதல்களுக்கு பிறகு, பாதிப்படைந்த ஒரு சிலர், தங்களால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை எனவும், சிறிய அளவில் தங்கள் மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சுகின்றனர். ஒரு சிலர், மீண்டும் தங்கள் சொந்த நாடான அமெரிக்காவுக்கே சென்று விடக் காத்திருக்கின்றனர். இதெல்லாம் நடந்த பின்புதான் அமெரிக்கா இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்ற முடிவுக்கே வந்திருக்கிறது. இப்படி ஒரு அசாதாரண சூழலில் இவ்வகை தாக்குதல்களுக்கு சோனிக் வகை ஆயுதங்கள் (Sonic Weapons) பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

Sponsored


ஒலியே ஆயுதம்

இதுவரை அறிவியல் தொட்டுவிட்ட இலக்கங்களின் படி, ஒலியை ஆயுதமாகப் பயன்படுத்தும் பட்சத்தில் அதன் விளைவுகள் அப்போதே அரங்கேறிவிடும். ஒரு குண்டு வெடித்தால் பாதிப்பு அப்போதே நிகழும். உயிர்கள் போகும், பொருள்கள் சேதமடையும். அதுபோல்தான் இந்த ஒலி ஆயுதங்களும். ஃப்ளாஷ் பேங் குண்டுகள் (Flash Bang Grenades) மற்றும் ஒலி பீரங்கிகள் (Sound Cannons) போன்றவை இந்த வகைகளைச் சேர்ந்தவைதான். ஜேம்ஸ் ஜவுசெம் (James Jauchem) என்ற ஓய்வுபெற்ற விஞ்ஞானி இதுகுறித்து பேசுகையில், “எதை வைத்து இவர்கள் ஒலி ஆயுதம் என்ற முடிவுக்கு வந்தார்கள் என்று தெரியவில்லை. அந்த ரிப்போர்ட்கள் நம்பகமானதா இல்லையா என்பதை அறிவியல் கொண்டு ஆராய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அஸோஸியேட் பிரஸ் கூற்றுப்படி, தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாய் அமெரிக்க தூதர்கள் முதலில் உணர்ந்தது கடந்த டிசம்பர் மாதத்தில் தான். அப்போது முதல் சென்ற மாத இறுதிவரை வரை பல அமெரிக்க தூதர்களிடம் இருந்து இதே வகை புகார்கள் வந்துவிட்டன. இவ்வகை பாதிப்பு ஏற்பட்டவர்களில் ஒரு சிலர் மட்டுமே தாங்கள் வித்தியாசமான ஒலியைக் கேட்டதாக கூறியுள்ளனர். பலருக்கு அவ்வகை ஒலியோ அல்லது சந்தேகப்படும்படியான நிகழ்வையோ உணர முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால், ஒலிதான் ஆயுதம் என்றானபின், கேட்கமுடியாத டெசிபல்களில் கூட ஒலியைச் செலுத்தி பாதிப்பை ஏற்படுத்தலாமே என்று ஒரு கருத்தும் நிலவுகிறது.

மறுக்கும் கியூபா

கியூபா நாட்டின் அரசுத்துறை செய்தி தொடர்பாளர் ஹீத்தர் நாவேர்ட் (Heather Nauert) இவ்வகை நிகழ்வுகளுக்கும் கியூபாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஒலி ஆயுதம் என்று கூறுவதை, அதற்கான தடயங்கள் கிடைக்கும் வரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

ஒருவரை ஒலியால் பாதிப்படையச் செய்யவோ, செயலிழக்க வைக்கவோ முடியும் என்றாலும் அதற்குத் தேவை அதீத ஒலி. அது ஒருவரின் காதுகளை கிழிக்கும் தன்மையில் இருக்கும். உள்ளிருக்கும் உறுப்புகளை இயல்புக்கு மீறிச் செயல்படுத்த வைத்துப் பாதிப்பை உண்டாக்கும். பல அமெரிக்க தூதர்கள் அவ்வகை ஒலியைக் கேட்கவில்லை என்றே தெரிவித்துள்ளனர். அப்படியிருக்கும் தருணத்தில், ஒலியற்ற அமைதியை எப்படி ஆயுதமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அறிவியல் என்ன சொல்கிறது?

ஒலி ஆயுதங்கள் அதீத கொடூரமான சத்தங்களைக் கொண்டதாகவே இருக்கும். அப்படிப் பார்த்தால் கொடூர ஒலி ஆயுதம் என்பது உரத்த இசை தான். 1989ல் அமெரிக்கா, பதுங்கியிருந்த பனாமா சர்வாதிகாரியான மானுவல் நோரிகாவை (Manuel Noriega) வெளியே வரவழைக்கக் கட்டவிழித்துவிட்டது பிளாக் சப்பாத் அண்ட் கன்ஸ் அண்ட் ரோஸஸ் பாடல்களைத்தான். 1993ல் டெக்சாஸ் மாகாணத்தைச் சார்ந்த மதக் குழு ஒன்றைக் கட்டுக்குள் கொண்டு வர, FBI ஒலிக்கச் செய்தது மரணிக்கும் முயல்களின் சத்தமும், திபெத்தியர்களின் பிரார்த்தனைப் பாடல்களையும் தான்.

ஒலி என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு இந்தக் காணொளி ஒரு உதாரணம். ஆனால், இவற்றில் பெரும்பாலானவற்றுக்கு முறையான அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை.

மனிதர்களால் கேட்க முடியாத சத்தங்கள் நிறைய உண்டு. உதாரணத்துக்கு, நாய்கள் எழுப்பும் விசில் சத்தம் மற்றும் நிலநடுக்கத்தின் ஒலி. இவ்விரண்டும் முறையே மீயொலி (ultrasound) மற்றும் தாழ்ஒலி (infrasound) அதிர்வெண்களைச் சேர்ந்தவை. ஆனால், உங்கள் செவியே கேட்கமுடியாமல் போய் விடுகிறது என்றால், அது நிச்சயம் மனிதர்கள் கேட்கும் அதிர்வெண்களில்தான் இருக்க முடியும். பாதிக்கப்பட்ட 21 அமெரிக்க தூதர்கள் அதிகம் கூறிய பாதிப்புகள் கேட்கும் திறன் குறைதல், தலைவலி, குமட்டல் மற்றும் மூளை பாதிப்பு (கவனம் செலுத்த முடியாத நிலை). இவ்வகை பாதிப்புகளில் கேட்கும் திறன் செயலிழப்பு, லேசான தலைவலி தவிர மற்ற அனைத்தும் ஒலியால் ஏற்படுமா என்றால் அதற்கு போதுமான ஆதாரமோ, அறிவியல் விளக்கங்களோ இல்லை என்றுதான் கூற முடியும். எது எப்படியோ, விஞ்ஞானிகளுக்கு இந்த விசித்திர நிகழ்வுக்குப் பின்னால் இருக்கும் அறிவியலை விளக்கும் வரை உறக்கமில்லை என்பது மட்டும் உண்மை.Trending Articles

Sponsored