ஜெயலலிதா இறப்புக்கு 15 மாதங்களுக்கு முன் என்ன நடந்தது? ஓர் டைம் ட்ராவல் #VikatanTimeline



ஜெயலலிதா இந்திய அளவில் மிகப்பெரிய அரசியல் பெண் ஆளுமைகளில் ஒருவர். இரும்பு மனுஷி என அழைக்கப்பட்டவர். சர்ச்சைகள்.... ஊழல்கள் என அனைத்தையும் சந்தித்து ஐந்து முறை முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவர். செய்வீர்களா என கம்பீரக் குரலில் முழங்கியதை இன்னும் தமிழக மக்கள் மறக்கவில்லை. செப்டம்பர் 22, 2016 நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். டிசம்பர் 5, 2016 இதயத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக காலமானார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கிறது. 

ஆனால் 2015-ம் ஆண்டு ஆனந்த விகடன் இதழில் நலந்தானா ஜெயலலிதா ? என்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த கட்டுரை வெளியாகி இருக்கும். அதில் ''ஜெயலலிதாவும் ஜெர்க் ஆகி இருக்கிறார். சமீப காலமாக அவரது உடல்நிலை பற்றி எத்தனையோ தகவல்கள், வதந்திகள் பரவிக்கிடந்தாலும், அவரைப் பார்க்கும்போதும் அவரது நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிக்கும்போதும் உடல் நலமின்மையை அறிய முடிகிறது. அரசல்புரசலான செய்திகள் றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டதை உணர்ந்த ஜெயலலிதா, அதை லேசாக வெளியில் சொல்லியாகவேண்டிய நெருக்கடிக்கும் தள்ளப்பட்டுள்ளார்'' என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அவரது உடல்நிலை சரியில்லை என்பதை 15 மாதங்களுக்கு முன்பே தெரிய துவங்கியுள்ளது. அதன்பின் மருத்துவமனையில் இருந்த 75 நாள்கள் அப்டேட் இதோ...

Sponsored



குறிப்பு: கீழே உள்ள படத்தை க்ளிக் செய்தால் ஜெயலலிதா அப்போலோவில் இருந்த நாள்களில் நடந்த நிகழ்வுகளின் செய்திகள் தேதி வாரியாக இருக்கும் அதனை க்ளிக் செய்தால் முழுமையான அப்டேட் தெரிய வரும்..

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored