இந்தியாவே உற்றுப்பார்க்கும் தமிழக அரசியல் வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் பற்றி தெரியுமா?Sponsoredமிழக அரசியல் நிலவரம் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 20-ம் தேதி நடந்த வழக்கு விசாரணையை ஒட்டுமொத்த  இந்தியாவே கவனித்தது. எடப்பாடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க தொடர்ந்த வழக்கும், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த டி.டி.வி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்களின் வழக்குகளும் கடந்த 20-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி துரைசாமியின் முன்பு விசாரணைக்கு வந்தன.  
வழக்கு விசாரணையில் இந்திய அளவில் டாப் டென் வரிசையில் இருக்கும் வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், டி.டி.வி எம்.எல்.ஏ-க்கள் தரப்பு, எதிர்க்கட்சித் தலைவர்  மு.க.ஸ்டாலின் ஆகிய நான்கு பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்தியாவில் அதிக கட்டணம் வாங்கும் பிரபலமான வழக்கறிஞர்கள். அவர்களைப் பற்றிய தகவல்கள்...

கருத்து சுதந்திரத்துக்காக ஆஜரானவர்

Sponsored


முதலில் சபாநாயகர் தரப்பில் ஆஜரான Aryama Sundaram ஆர்யம சுந்தரம் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம். ஒரே ஒரு கிராமத்திலே’ எனும் திரைப்படத்தில் ஏழை பிராமணப் பெண்ணாக நடிகை லட்சுமி நடித்திருந்தார். வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக தாழ்த்தப்பட்டவர் என்று ஜாதியை மாற்றி சான்றிதழ் பெற்றுவிடுவார் என்று அந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த கதைக்கரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அரசமைப்புச் சட்டம் வழங்கும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசுகிறது; இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் என்று காரணம் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் இத்திரைப்படத்தைத் திரையிடுவதற்கான அனுமதிச் சான்றை ரத்துசெய்து தீர்ப்பளித்தது. இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர், தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். அப்போது என்.ரங்கராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்தான் Aryama Sundaram.  இவரது வாதத்தால், ஒரே ஒரு கிராமத்திலே திரைப்படம் திரையிடத் தடையில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

Sponsored


இந்தியாவில் அதிக அளவு சம்பளம் வாங்கும் முதல் பத்து வழக்கறிஞர்களில் இவரும் ஒருவர். சபாநாயகர் தனபால் தரப்பில் ஆஜரான இவருக்கு எவ்வளவு கட்டணம் தரப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், இவர் ஒரு முறை ஆஜராகி வாதாடுவதற்கு 5 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்.   ஊடக சுதந்திரம், அரசியல் சட்டவிவகாரம் தொடர்பான வழக்குகளில் எக்ஸ்பர்ட் இவர். தவிர இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அம்பானி குழுமம் போன்ற பெருநிறுவனங்கள் தரப்பில் ஆஜராகும் கார்ப்பரேட் வழக்கறிஞராகவும் இவர் இருக்கிறார்.

பெரிய தலைகளின் வழக்கறிஞர்

மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், பெரிய அரசியல்வாதிகளுக்காகவும், பெருநிறுவனங்களின் அதிபர்களுக்காகவும் ஆஜராகக் கூடியவர். இவரது லேட்டஸ்ட் கிளையன்ட் லிஸ்டில் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். இரட்டை இலை வழக்கில் பன்னீர் தரப்பில் தேர்தல் ஆணையத்தில்  ஆஜராகி வாதங்களை எடுத்து வைத்தவர். இது தவிர,வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையா தரப்பில் இந்தியாவில் நடக்கும் வழக்குகளில் ஆஜராகி வருகிறார். இவர், மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் ஜூனியர் வழக்கறிஞராக இருந்தவர். இப்போது முதல்வர் எடப்பாடி தரப்பில் ஆஜரானவர் சி.எஸ்.வைத்தியநாதன்.  இவரும் லட்சங்களில் சம்பளம் பெறுபவர்.
மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் முன்னாள் மத்திய அமைச்சரும் கூட. இவர் ஒரு முறை வழக்கில் ஆஜராவதற்கு 5 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை கட்டணம் பெறுகிறார். முத்தலாக் வழக்கில் முஸ்லிம் அமைப்பின் சார்பாக ஆஜரானார். இப்போது தி.மு.க தரப்பில்  உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். அரசியல் சட்டம் தொடர்பான வழக்குகளில் கைதேர்ந்தவர். மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.  

சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரானவர்

மூத்த வழக்கறிஞர் துஷியந்த் தவே, 18 எம்.எல்.ஏ-க்கள் சார்பில் டி.டி.வி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர். ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு இவர் வாங்கும் சம்பளம் ஐந்து லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தின் சார்பில் அப்பீல் செய்யப்பட்டபோது, கர்நாடகா தரப்பில் ஆஜரானவர் துஷியந்த் தவே. அரசியல் சட்டம் தொடர்பான வழக்குகளில் ஆஜராகக் கூடியவர். இப்போது தினகரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.Trending Articles

Sponsored