“நீங்கள் குற்றவாளி!” - ஜெயலலிதாவின் சரிவுக்கு வித்திட்ட நாள் இன்று #3YearsOfJayaVerdictSponsoredவிறுவிறுப்பான திரில்லர் படத்துக்கு இணையாக 'பர...பர...' காட்சிகளால் நிறைந்திருக்கிறது தமிழக அரசியல் களம். தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியான அ.தி.மு.க-வில் நிலவிவரும் குழப்பங்களும், பிரச்னைகளும் தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழப்பங்களுக்கு யார் காரணம்? எப்போது துவங்கியது இந்த குழப்பங்களும், பிரச்னைகளும்? என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. 

ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர்தான் இந்தப் பிரச்னை பரவலாக எழுந்தது எனச் சொல்லப்படுகிறது. ஆனால், தமிழக அரசியல் சூழ்நிலை மாற்றி அமைக்கப்பட்டு, மூன்றாண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது என்பதுதான் உண்மை. மூன்றாண்டுகளுக்கு முன்னர் இதேநாளில் (செப்.27) தனது வலிமையான பேனா முனையால் தமிழக அரசியல் சூழலை மாற்றி அமைத்தவர் கர்நாடகா சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா. 

Sponsored


தமிழக முதல்வராக நீதிமன்றத்துக்கு வந்த ஜெயலலிதாவை, 'நான்காண்டு சிறை;  100 கோடி அபராதம்' என முதல்வர் பதவியை பறித்துக்கொண்டு, அப்படியே சிறைக்கு அனுப்பி வைத்தது அந்த தீர்ப்பு. அடுத்த பல ஆண்டு தமிழக அரசியல் சூழ்நிலையை இந்தத் தீர்ப்பு மாற்றி அமைக்கும் என அப்போதே விமர்சிக்கப்பட்டது. அதைத்தான் அண்மைகால நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

Sponsored


முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் ஒருசேர இழந்து சிறைக்குச் சென்றவர், பின்னர் பிணையில் விடுதலையாகி, மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். மக்கள் மத்தியில் இந்தத் தீர்ப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், அடுத்து வந்த இடைத்தேர்தலில் வென்று 5-வது முறையாக முதல்வரானார் ஜெயலலிதா. தொடர்ந்து 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் வென்று, 6-வது முறையாகவும் முதல்வரானார். அசைக்க முடியாத வெற்றிதான் இது. கட்சியிலும், ஆட்சியிலும் ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதை இது உணர்த்தியது. 

ஆனால், அவரது உடல்நிலையை இந்தத் தீர்ப்பு பாதித்தது. ஜெயலலிதா உடல்நிலை மோசமடைய முக்கியக் காரணம் சர்க்கரை அதிகரிப்பு உள்ளிட்டவை. இவை எல்லாம் டென்ஷன் அதிகரிப்பால் வரும் பிரச்னைகள். 'ஜெயலலிதாவை சமீபகால நிகழ்வுகள் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றன. அதனால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்' என்றுதான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சொல்லப்பட்டது. அதில் மிக முக்கியமான டென்ஷன் இந்த சொத்துக்குவிப்பு வழக்கு.

கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு மனுவின் மீது, இன்னும் 4 வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என்ற அறிவிப்புதான் அது. இது ஜெயலலிதாவுக்கு நிச்சயம் நெருக்கடியை கொடுத்திருக்கும். குன்ஹாவின் தீர்ப்பால் சிறை சென்ற ஜெயலலிதாவை நிச்சயம் இந்த அறிவிப்பு பாதித்திருக்கும். தீர்ப்பு எப்படி வருமோ என்ற பதைபதைப்பு அவரிடம் இருந்திருக்கும். இது டென்ஷனை அதிகரித்திருக்கக் கூடும் என சொல்லப்பட்டதை சாதாரணமாகக் கடந்து விட முடியாது. ஜெயலலிதா மரணமடைந்த பின்னரும் இந்த தீர்ப்பின் பாதிப்பு இருக்கவே செய்தது.

ஒற்றைத் தலைமைதான் அ.தி.மு.க-வின் முகம். ஜெயலலிதாவுக்குப் பின்னர் சசிகலா ஒற்றைத்தலைமையை ஏற்று நடத்தும் சூழல் ஏற்பட்டபோது, சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வந்தது. குன்ஹாவின் தீர்ப்பை உறுதிசெய்தது உச்சநீதிமன்றம். ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அ.தி.மு.க-வுக்கு சரிவராத கூட்டுத்தலைமை உருவானது. அதிகாரத்துக்கான போட்டி உருவானது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், தீபா என பல முனைகளில் அ.தி.மு.க. பிரிந்து நின்றது. இன்றுவரை அ.தி.மு.க-வில் நடக்கும் விறுவிறுப்பான காட்சிகளுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது சொத்துக்குவிப்பு வழக்கும், அதில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பும்.

ஒருவேளை குன்ஹாவின் தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டிருந்தால் இவை எல்லாம் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு என்றே பார்க்க வேண்டும். சிறையில் அடைக்கப்படாமல் இருந்திருந்தால், உடல்நிலையை கவனிக்க கொடநாடு சென்று ஓய்வு எடுத்திருந்திருப்பார். மனதளவில் சோர்வும், டென்ஷனும் ஏற்படும்போதெல்லாம் கொடநாடு சென்று உடலையும், மனதையும் சரிப்படுத்திக்கொண்டு வருவதுதான் ஜெயலலிதாவின் வழக்கம். அதை மாற்றி அமைத்தது இந்த வழக்கின் தீர்ப்பு.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் குன்ஹாவின் தீர்ப்பு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்றே சொல்ல வேண்டும். சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் சசிகலா தேர்வு செய்யப்பட்ட நேரத்தில் இந்த மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு வந்தது. ஒருவேளை உச்சநீதிமன்றம் குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்யாமல் இருந்திருந்தால், சசிகலா முதல்வராகி இருக்கக் கூடும். அ.தி.மு.க. ஒற்றைத்தலைமையுடன் இருந்திருக்கக் கூடும்.

இந்தக் குழப்பத்தை பயன்படுத்தி, தமிழகத்தில் எப்படியேனும் கால்பதித்துவிட வேண்டும் என முயன்றது பி.ஜே.பி. மறுபுறம் ரஜினிகாந்த் அரசியல் ஆசைகளை வெளிப்படுத்தினார். கமலஹாசன் தனது அரசியல் அறிவிப்பை வெளிப்படையாகவே வெளியிட்டார். இப்படி தமிழக அரசியல் பெரும் பரபரப்பாகவும், குழப்பமாகவும் மாற வித்திட்ட நாள் இன்று.Trending Articles

Sponsored