காற்றின் திசை மாற்றம், பருவமழையைத் தாமதிக்கிறதா?Sponsoredடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசத் தொடங்கி, வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி அது, புயலாக மாறும்போதுதான் (வடகிழக்குப் பருவமழை காலத்தில்தான்) தமிழகத்துக்குத் தேவையான 60 சதவிகித மழை கிடைக்கிறது.

வடகிழக்குப் பருவமழை வழக்கமாக அக்டோபர் 20-ம் தேதி தொடங்க வேண்டும் என்பது வானிலை மையம் குறிப்பிடும் காலகட்டம். ஆனால், இந்த தேதிக்கு ஒருவாரம் முன்னதாகவோ அல்லது ஒரு வாரம் கடந்தோ பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதிக்குப் பின்னர்தான் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு இல்லை. பற்றாக்குறை மழையே பொழிந்தது.

Sponsored


கைகொடுத்த தென்மேற்கு பருவமழை

Sponsored


இந்தப் பற்றாக்குறையை கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை பெய்த தென்மேற்குப் பருவமழைதான் தீர்த்தது. மற்ற மாநிலங்களை விடவும் தென்மேற்குப் பருவமழை, தமிழகத்தில் வழக்கமான அளவைவிட 31 சதவிகிதம் அதிகமாகப் பெய்திருக்கிறது என்று சென்னை வானிலை மையம் கணக்கிட்டுச் சொல்கிறது. மழை இன்றி காய்ந்து கிடந்த தமிழகத்தை நனைத்து விட்டுச் சென்றது தென்மேற்குப் பருவமழைதான்.

கடந்த செப்டம்பர் 30-ம் தேதியோடு தென்பருவமழை முடிவடைந்த போதிலும், அதன் மிச்சம் சொச்சங்களாக கடந்த 21 நாள்களாக அவ்வப்போது மழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சிகள் காரணமாக இந்த மழை பெய்தது. இதனால், தமிழகத்தில் பருவமழைக்கு முன்னதாக ஒரளவுக்கு மழை பெய்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த 21 நாள்களாக பெய்த மழை விவரத்தை இந்திய வானிலை மையம் வரைபடத்தில் வெளியிட்டிருப்பதை கீழே காணலாம். (வரை படத்தில் உள்ள மழை அளவுகள் செ.மீ-ல் கூறப்பட்டுள்ளன.)

திருவண்ணாமலையில் அதிகம்

21-ம் தேதி காலை 8.30 மணி வரை முடிவடைந்த நேரத்தில் கடந்த 21 நாள்களாக பெய்த மழையின் அளவுகளை சென்னை வானிலை மையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி பார்த்தால்,  திருவண்ணாமலையில் அதிகபட்சமாக 232.9 மி.மீ மழை பெய்திருக்கிறது. கிருஷ்ணகிரியில் 218 மி.மீ மழை பெய்திருக்கிறது. வேலூரில் 200.5 மி.மீ மழை பெய்திருக்கிறது.

தமிழகத்திலேயே மிக, மிகக் குறைவாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12.3 மி.மீ மழைதான் பெய்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 16.8 மி.மீ மழையும், தூத்துக்குடி மாவட்டத்தில் 17.1 மி.மீ மழை பெய்திருக்கிறது. சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை, 95.8 மி.மீ மழை பெய்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை 146. 1 மி.மீ மழை பெய்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 173.4 மி.மீ மழை பெய்திருக்கிறது. இதனால்தான் இந்த மூன்று மாவட்டத்திலும் உள்ள ஏரிகளில் குறைந்த அளவேனும் நீர் நிரம்பி இருக்கிறது. சென்னை நகரின் தண்ணீர் தாகத்தை ஓரளவுக்கேனும் போக்கி இருக்கிறது.  

எப்போது காற்று மாறும்?

தென்மேற்குப் பருவமழை காலத்தில் தமிழகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து வீசிய காற்று, இன்னும் சில நாள்களில் மாறத்தொடங்கும். அதாவது இன்னும் சில நாள்களில் வடகிழக்குத் திசையில் இருந்து தமிழகத்தில் காற்று வீசத் தொடங்கும். அதைத்தான் வடகிழக்குப் பருவமழை என்று நாம் சொல்கிறோம். வடகிழக்குப் பருவமழை தாமதம் ஆவதற்கு காரணம் என்ன என்று சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரனிடம் கேட்டோம். “வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு வரும் 25-ம் தேதிக்குப் பின்னர்தான் தொடங்கும். இன்னும் வடகிழக்குத் திசையில் இருந்து தமிழகத்துக்கு காற்று வீசவில்லை. இப்போது வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது ஒடிசா கடலை நோக்கி நகர்ந்துள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எல்நினோ போன்றவற்றின் தாக்கங்கள் ஏதும் வங்கக் கடலில் இல்லை. சாதகமான சூழல் இருப்பதால் இன்னும் 5 நாள்கள் கழித்து பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்”  என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.Trending Articles

Sponsored