மோடி, ராகுல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல்... குஜராத் கள நிலவரம் சொல்வது என்ன?



Sponsored



ளர்ச்சியா, அடித்தட்டு மக்களின் முன்னேற்றமா என்பதுதான் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இப்போதைக்கு எதிரொலிக்கும் கோஷமாக இருக்கிறது.

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டது குஜராத் மாநிலம். இங்கு முதல்கட்டமாக 89 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு டிசம்பர் 9-ம் தேதியும், இரண்டாம்கட்டமாக டிசம்பர் 18-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.

Sponsored


பிரசாரம் தீவிரம்

Sponsored


குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக அதிகபட்ச வெப்பநிலை என்பது 30 டிகிரி சென்டிகிரேட் ஆகத்தான் இருக்கிறது. ஆனால், தேர்தல் பிரசாரத்தின் அனல் அதிகரித்திருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு குஜராத்தில் நடந்த பல்வேறு கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடந்த ஒரு வாரமாக குஜராத்தில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.  

பி.ஜே.பி வேட்பாளர் பட்டியல்

இந்தச் சூழலில் பி.ஜே.பி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் கடந்த 17-ம் தேதி வெளியிடப்பட்டது. ராஜ்கோட் மேற்கு தொகுதியில் முதல்வர் விஜய் பாய் ரூபானி போட்டியிடுகிறார். துணை முதல்வர் நிதின் பாட்டீல் மெக்ஹ்சானா தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். இப்போது இருக்கும் பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்களுக்கும் போட்டியிட உள்ளனர். இந்த நிலையில் 36 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலையும்  பி.ஜே.பி  வெளியிட்டுள்ளது. இதில் 19 பேர் புது முகங்கள், 2012-ம் ஆண்டு குஜராத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த சிலருக்கும் பி.ஜே.பி-யில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பட்டியல் எப்போது?

காங்கிரஸ் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து டெல்லியில் மத்திய காங்கிரஸ் கமிட்டி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இன்றோ அல்லது நாளையோ வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது.

தேர்தல் சுனாமி

இதனிடையே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். மோடி பாணியில், தொகுதியை வலம் வருகிறார். "டிசம்பர் மாதம் குஜராத்தில் சுனாமி வரப்போகிறது. அந்த சுனாமியைப் பாரத்து பி.ஜே.பி பயப்படுகிறது. பெரும்பாலான தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நவம்பர் முதல்வாரம் குஜராத்தில் பல்வேறு கூட்டங்களில் பேசிய நரேந்திர மோடி, மீண்டும் 19-ம் தேதி முதல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 32 மாவட்டங்களிலும் தலா ஒரு இடத்திலாவது  பிரசாரக் கூட்டத்தில் மோடி பங்கேற்றுப் பேசுவார் என்று தெரிகிறது.

யாருக்கு சலுகை?

பி.ஜே.பி தலைவர்கள், மோடியின் இமேஜ், மாநிலத்தின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு பிரசாரம் செய்கின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சியினர், விவசாயிகளின் நிலையைச் சொல்லி ஓட்டுக் கேட்கின்றனர். பெரும் தொழிலதிபர்களுக்குக் கடன் தள்ளுபடி செய்யும் வங்கிகள், விவசாயிகளைக் கண்டு கொள்வதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

விவசாயிகளின் வாக்குகள், இஸ்லாமியர் வாக்குகள், ஹர்த்திக் படேலின் ஆதரவு, கடன் தள்ளுபடி என்பது போன்ற வாக்குறுதி ஆகியவற்றை காங்கிரஸ் நம்புகிறது.

குஜராத் வளர்ச்சி, தொழில்கள் அதிகரிப்பு ஆகியவற்றின் சாதக அம்சங்களைச் சொல்லி பி.ஜே.பி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள வணிகர்கள் வாங்கு வங்கி, யாருக்குக்கிடைக்கும் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. ஜி.எஸ்.டி வரி காரணமாக வருத்தத்தில் இருந்த வணிகர்களைச் சமாதானப்படுத்தும் வகையில், மத்திய அரசு அண்மையில் ஜி.எஸ்.டி வரியைக் குறைத்து வெளியிட்டிருக்கிறது.  

இந்த ஜி.எஸ்.டி மாற்றம் வணிகர்கள் சிலரிடம் வரவேற்பைப் பெற்றாலும், ஒட்டு மொத்தமாக எந்தவிதப் பயனும் தருவதாக இல்லை என்று கூறுகின்றனர்.

குஜராத் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகும். இந்தத் தேர்தல் முடிவுகள்தான் மோடி, ராகுல் இருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளன. மோடியைப் பொறுத்தவரை, சொந்த மாநிலத்தில் வெற்றி பெற்றால், அடுத்து நடைபெறவிருக்கும் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று கருதுகிறார்.  

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, ராகுலை தேசியத் தலைவர் ஆக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. ராகுல் தலைமையில் நடக்கும் குஜராத் தேர்தல் அவருக்கு ஒரு பரிசோதனைக் களமாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.



Trending Articles

Sponsored