சென்னையில் இனி கனமழை பெய்யுமா...வானிலை மையம் சொல்வது என்ன?



திக மழைப்பொழிவைத் தந்து, குடிநீர் தேவையையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 27-ம் தேதி தொடங்கியது. தொடங்கிய சில நாட்களில் நவம்பர் மாதம் முதல்வாரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.

Sponsored


அதன் பின்னர், கடந்த சில நாட்களாகவே மழை இல்லாமல் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. மூன்று நாட்கள் முன்பு வரை காலை நேரத்தில் லேசான பனி மூட்டமும் இருந்தது.
இந்த சூழலில் 21-ம் தேதி வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று இந்திய வானிலை மையம் கூறி இருந்தது. 27-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும் என்றும் முன் கணிப்புகள் சொல்லப்பட்டிருந்தன. ஆனால், எதிர்பார்த்தபடி 21-ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை ஏதும் உருவாகவில்லை.

Sponsored


டிசம்பர் 31-ம் தேதி வரை வடகிழக்குப் பருவமழை காலம் இருந்த போதிலும், மழை குறைந்திருப்பது கவலையை அளிக்கிறது. இனி மழை பெய்யுமா? என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரனிடம் கேட்டோம். "சென்னைக்கு இப்போதைக்கு மழை குறைவாகத்தான் இருக்கும், லேசான மழை இருக்கும். 21-ம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்பார்த்தப்படி உருவாகவில்லை. இன்னும் ஒரு நாள் தாமதமாகலாம். சென்னைக்கு இனி ஒரு கனமழை இருக்குமா என்பதை இப்போதே சொல்ல முடியாது. டிசம்பரில் மழை பெய்யுமா என்பதையும் இப்போதைக்கு கணிக்க முடியாது. வரும் ஒரு சில நாட்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும்" என்றார்.

Sponsored


மழை நிலவரம்

தமிழகத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 20-ம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி 258. 8 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது.அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் 786.2 மி.மீ மழை பெய்திருக்கிறது. சென்னை மாவட்டத்தில் 757 மி.மீ மழை பெய்திருக்கிறது. தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் (133.6 மி.மீ), சிவகங்கை மாவட்டம் (140.9 மி.மீ) ,தூத்துக்குடி மாவட்டம் (142.3 மி.மீ), கரூர் மாவட்டம்(117.3 மி.மீ) என குறைவாக மழை பெய்திருக்கிறது.

ஏரிகள் நிலவரம்

சென்னைக்கு குடிநீர் தரும் பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளிலும் சேர்த்து நவம்பர் 21-ம் தேதி நிலவரப்படி 4,527 மில்லியன் கன அடித்தண்ணீர் இருக்கிறது.  இதே தேதியில் கடந்த 2016-ம் ஆண்டு  824 மில்லியன் கன அடி நீர் இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இப்போது  மூன்றரை மடங்கு அதிகமாகவே ஏரிகளில் தண்ணீர் இருக்கிறது. ஆனால், இந்த அளவு தண்ணீரை வைத்து சென்னை மக்களுக்கு, தடையில்லாமல் குடிநீர் வழங்க முடியாது. கடந்த 2015-ம் ஆண்டு இதே நாளில் 9,149 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது.  2015-ம் ஆண்டு நவம்பர் இறுதியிலும், டிசம்பர் முதல்வாரத்திலும்தான் அதிக மழை பெய்தது. இதனால், நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. மீண்டும் அதே போல ஒரு பெருமழை பெய்யுமா என்பதுதான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது.இல்லாவிட்டால் மீண்டும் ஒரு குடிநீர் பஞ்சத்தை சென்னை சந்திக்க நேரிடும்.



Trending Articles

Sponsored