டீசர் க்ளூ... ’வேலைக்காரன்’ என்ன செய்யப் போகிறான்!?Sponsoredவேலைக்காரன் படத்தின் டீசரில் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். அதில் மேஜையின் மீது ஒட்டப்பட்டுள்ள பேப்பரில் குப்பைக் கழிவு அகற்றம் என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கும். சமீபத்தில் வேலைக்காரன் இசை வெளியீட்டு விழாவிலும் சிவகார்த்திகேயன் 'இந்தப் படம் பேசும் சமூகப் பிரச்னை ஆபத்தானதாக இருக்கும்' என்று கூறியிருந்தார். காட்சிகளின் பின்னணியிலும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாகவே இருக்கின்றன. ஒருவேளை இந்தப் படம் பேசுவது குப்பைகளால் ஏற்படும் பாதிப்புகளாக கூட இருக்கலாம். குப்பைகளால் இந்தியா எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்று தேடினால் கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. 

சாதாரணமா டீ குடிச்சிட்டு ரோட்ல தூக்கிப்போடுற பேப்பர் கப்புல ஆரம்பிச்சு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளால் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் வரை எல்லாமே பூமியை பாழ்படுத்துபவைதாம். இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக ஆண்டுக்கு 1.5 கோடி டன் குப்பைக்கழிவுகள் உருவாக்கப்படுகின்றன. அதில் 1 கோடி டன் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை. 

Sponsored


இந்திய நகரங்களில் டெல்லியில் 2000வது ஆண்டில் ஒரு நாளைக்குக் கொட்டப்படும் குப்பை 400 டன்னாக இருந்தது. இன்று அது 8700 டன்னாக மாறியுள்ளது. இதேபோல் சென்னையில் 2000வது ஆண்டில் 3124 டன் குப்பைகள் கொட்டப்பட்டன. ஆனால் இன்று 5000 டன் குப்பைகள் கொட்டப்படுகிறன. கூவம் என்பது அழகான நதி என்பதை சாக்கடைகளின் சங்கமமாகப் பார்க்க வைத்தது இந்தக் குப்பைக் கழிவுகளின் வளர்ச்சிதான் என்பது மறுக்க முடியாத உண்மை.

Sponsored


தமிழகத்தில் நகர்ப்புறத்தில் மட்டும் 15152 டன் குப்பைகள் ஒரு நாளைக்கு கொட்டப்படுகிறன. சென்னை இந்தியாவின் அதிக குப்பை உருவாகும் நகரங்களில் முன்னணி வரிசையில் இடம்பிடிக்கிறது. 

இந்தியாவில் குப்பைகள் அதிகம் உருவாவதைத் தடுக்கவே இன்னும் நாம் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் 50000 மில்லியன் டன் எலெக்ட்ரானிக் குப்பைகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியா உலகின் எலெக்ட்ரானிக் குப்பைகள் கொட்டும் இடமாக மாறிவருவது ஆபத்தான செய்தி.

இந்தியாவில் நகர்ப்புறங்களில் எவ்வளவு பகுதிகளில் குப்பை கொட்டப்படுகிறது என்று பார்த்தால் சென்னையில்தான் 465.5 ஹெக்டேர் அளவுக்குக் குப்பை மலைபோல குவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பெங்களூரும், மும்பையும், ஹைதராபாத்தும் உள்ளன. உலகில் நடக்கும் 4 மரணங்களில் ஒன்றில் இந்தக் குப்பைக் கழிவுகளின் தொடர்பு உள்ளது. ஆண்டுக்கு 12 கோடி பேர் உலக அளவில் குப்பைக் கழிவு பாதிப்புகளால் இறக்கின்றனர். 

குப்பைப் போடுவது தவறு எனக் கூறும் அரசாங்கமும், குப்பைகளைக் கொட்டுவதற்கு சரியான வழிமுறையைக் கையாளவில்லை. இந்தியாவில் இறக்குமதியாகும் இ-வேஸ்ட் எனும் எலெக்ட்ரானிக் குப்பைகள் அதிக அளவில் ஐடி நகரமான பெங்களூரில் கொட்டப்படுவது எந்த அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்றால் 2030க்குள் பெங்களூரு நகரை இ-வேஸ்டால் மூட முடியுமாம். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மொபைல் வளர்ந்த அதே வேகத்தில் குப்பைக்கழிவுகளும் வளர்ந்துள்ளன. குப்பைக் கழிவுகளில் மருத்துவக் கழிவுகளும், எலெக்ட்ரானிக் கழிவுகளும் மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை.

இந்த அளவு இமாலய பிரச்னைகள் ஒரு டீ கப்பிலிருந்து ஆரம்பிக்கின்றன. கழிவுகள் மேலாண்மைக்கான தொழில்நுட்பங்கள் அதிகமாக உள்ளன. நியூஸிலாந்து போன்ற நாடுகள் கழிவு மேலாண்மையில் முதன்மையாக உள்ளன, அது போன்ற தொழில்நுட்பங்களைக் கையில் எடுத்தால் இந்தியா குப்பை மேடாவது குறையும்.

வேலைக்காரன் இந்தப் பிரச்னையை பேசும் என்றால் நிச்சயம் அது வரவேற்க வேண்டியதே. சிங்கம் 3ம் இந்தப் பிரச்னையை கையாண்டது என்பது குறிப்பிடத்தக்கது.Trending Articles

Sponsored