தாம்பரம் எனும் பசுமைப் பள்ளத்தாக்கு..! 2015 சென்னை மழையின் மீள் நினைவுகள் பகுதி-9Sponsoredசென்னையைப் புரட்டிப் போட்ட பெருமழையில் எண்ணற்ற புத்தகங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அசோகர் நகர் நூலகத்திலிருந்த 1.50 லட்சம் புத்தகங்களில் வெறும் 11,000 நூல்கள் மட்டுமே பைண்ட் செய்யப்பட்டு மீண்டும் பாதுகாக்கப்பட்டன.

மீண்ட நூலகம்

Sponsored


பெரும்மழை களவாடிப்போன புத்தகங்களுக்குப் பதில் நூலகத்துறையிலிருந்து 7 ஆயிரம் புத்தகங்கள் உடனடியாக அசோக்நகர் நூலகத்துக்கு வழங்கப்பட்டது. கன்னிமரா நூலகம், புத்தக விற்பனையாளர் சங்கமான பப்பாசி, ஈஷா உள்ளிட்ட அமைப்புகளும் புதிய நூல்களை அசோக்நகர் நூலகத்துக்கு வழங்கின.

Sponsored


மழையால் அழிந்துபோன 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் விவரங்கள் மீண்டும் சேகரிக்கப்பட்டன. தமிழ்நாடு பவுண்டேஷன் அறக்கட்டளையின் சார்பில் நூலகம் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நூலகம் மூன்று மாதங்களுக்குள் மீண்டும் தற்காலிகமாகத் திறக்கப்பட்டது என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டேன். முழுமையான சீரமைப்புக்குப் பின்னர் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி அசோகர் நகர் நூலகம் செயல் படத்தொடங்கியது. சிறுவர்கள் பிரிவு குழந்தைகளைக் கவரும் வகையில் வண்ணங்களுடன் புதுப்பிக்கப்பட்டிருந்தது. சென்னை நகரிலேயே ஒரு முன்மாதிரி நூலகமாகவும் அசோகர் நகர் நூலகம் இப்போது மாறியிருக்கிறது. பெருவெள்ளம் வந்தது கூட நன்மைக்குத்தான் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. இல்லாவிட்டால், இந்த அளவுக்கு நூலகம் மறுபிறவி எடுத்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. எந்த ஒன்றும் இன்னொரு நன்மையின் தொடர்ச்சியே என்பதற்கு அசோகர் நகர் நூலகம் உதாரணம் ஆகிப்போனது. எழுத்தாளர்கள் கலந்துரையாடல், நிகழ்வுகள், சிறுவர்களுக்கான நிகழ்வுகள் என்று முன் எப்போதும் இல்லாத வகையில் அசோக்நகர் நூலகம் செயல்படுகிறது அதற்கு மூலகாரணமாக இருந்தது பெருமழை.

அடையாறு ஆறு

2015 பெருமழையில் பெரும் அளவு பாதிக்கப்பட்டது சென்னை தாம்பரம் புறநகர் பகுதிகள்தாம். தாம்பரம் புறநகரிலிருந்துதான் அடையாறு உற்பத்தி ஆகிறது. அடையாறு இரண்டு கிளைகளைக் கொண்டது. ஒரு கிளை ஆறு தெற்குப் பகுதியில் ஆதனூரில் தொடங்குகிறது. இந்த ஆற்றுக்கு மட்டும் தெற்குப் பகுதியில் 232 ஏரிகள் நீர்ப்பிடிப்பு ஆதாரங்களாக இருக்கின்றன. இந்த ஏரிகளின் பரப்பளவு 200 சதுர மைல். இதில் பல ஏரிகளையும், ஏரிகளின் பரப்பும் இப்போது காணாமல் போய்விட்டன. வடக்கே செம்பரம்பாக்கம் ஏரியில் தொடங்கும் அடையாற்றின் கிளைக்கு 219 ஏரிகள் நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக இருக்கின்றன. இவற்றின் மொத்த பரப்பு 138 சதுர மைல். இரண்டு கிளை ஆறுகளும் திருநீர் மலையில் ஒன்று சேருகின்றன. இந்தத் தகவல்கள் பொதுப்பணித்துறையின் செங்கல்பட்டு சப்-டிவிஷன் வரைபடத்தில் இருக்கின்றன.

அடையாறு ஆற்றின் சீற்றத்தில் உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் புறநகர் வாசிகள்தாம். அதிலும் குறிப்பாக சி.டி.ஓ நகர் பகுதிதான்  முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியது. அங்கு இருக்கும் ஹரிதா என்கிளேவ் குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் சிவாஜியிடம் பேசினோம், "2015 பெரு மழை எங்களிடம் பெரிய பயத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த ஏரியாவை விட்டு பலர் வெளியேறி விட்டனர். இங்கு குடியிருப்போர் பல லட்சங்களை இழந்திருக்கின்றனர். 2015-ம் ஆண்டு டிசம்பர் வரை இங்கு வசித்தவர்களில் பெரும்பாலானோர் இப்போது இங்கு இல்லை. இப்போது இருப்பவர்கள் அதன் பிறகு குடி வந்தவர்கள்தாம்” என்கிறார்  

பசுமைப் பள்ளத்தாக்கு

"எனக்கு இப்போ 35 வயசு ஆகுது. நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் இந்தத் தாம்பரத்தில்தான். தாம்பரம் என்றால் இப்போது இருக்கும் தாம்பரம் இல்லை. பழைய தாம்பரம் என்ற பெயரில் ஒரு கிராமம் இருந்தது. எங்கள் வீட்டுக்கு முன்பு நெல் வயல் இருந்தது. தாம்பரத்தில் இப்போது இருக்கும் பஸ்ஸ்டாண்ட் மட்டும்தான் மேடான பகுதி. அதற்கு அப்புறம் படப்பை வரை பசுமைப் பள்ளத்தாக்கு போல பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும்" என்று 30 ஆண்டுகளுக்கு முன்பு, தான் பார்த்த பசும் வயல்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ராஜேஷ்.

இப்போது தாம்பரம் மக்கள் குழு என்ற பெயரில் இளைஞர்களை ஒருங்கிணைத்து ஏரிகளைக் காக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். "1983-ம் ஆண்டு தாம்பரத்திலிருந்த ஏரிகளிலிருந்து பாசன வாய்க்கால்களில் தண்ணீர் ஓடும். அந்தப் பாசன வாய்க்கால்தான் பாப்பான் கால்வாய். இப்போது அந்தக் கால்வாய் ஒரு கழிவு நீர் ஓடையாக ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. பி.டி.சி காலனி வழியே செல்லும் கால்வாய் முழுக்கவே ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருக்கிறது. பைபாஸ் சாலையின் பெரும்பாலான பகுதிகள் கால்வாய்மேல்தான் அமைக்கப்பட்டுள்ளன. தாம்பரம் புறநகர் பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியதுக்கு இதுதான் காரணம்" என்ற வாதத்தை ராஜேஷ் முன் வைக்கிறார்.

அடையாறு ஆற்றங்கரையில் இருந்த வரதராஜபுரமும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று அது குறித்து அடுத்த அத்தியாயத்தில்  பார்க்கலாம்...

இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்...

சென்னை மழையின் மீள் நினைவுகள் 1

சென்னை மழையின் மீள் நினைவுகள் 2

சென்னை மழையின் மீள் நினைவுகள் 3

சென்னை மழையின் மீள் நினைவுகள் 4

சென்னை மழையின் மீள் நினைவுகள் 5

சென்னை மழையின் மீள் நினைவுகள் 6

சென்னை மழையின் மீள் நினைவுகள் 7

சென்னை மழையின் மீள் நினைவுகள் 8Trending Articles

Sponsored